/indian-express-tamil/media/media_files/CFuFbpGreDBLsxs8CdSd.jpg)
"தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்" என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக என இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, கனமழைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு பருவமழை இன்று 15 அக்டோபர் 2024 அன்று நாடு முழுவதும் இருந்து விலகியுள்ளது. அதே நேரத்தில், வடகிழக்கு பருவமழை இந்தியாவின் தென்கிழக்கு பகுதியில் இன்று அக்டோபர் 15 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Withdrawal of southwest Monsoon from entire country and simultaneous Commencement of Northeast Monsoon rainfall over southeast peninsular India, today, the 15th October, 2024.
— India Meteorological Department (@Indiametdept) October 15, 2024
Southwest monsoon has withdrawn from the entire country today, the 15th October 2024. Simultaneously,… pic.twitter.com/3J9ytjP2Wg
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.