India Smart Cities Awards Contest (ISAC) 2022: இந்தியா ஸ்மார்ட் சிட்டி விருது போட்டியில் (India smart city award contest - ISAC 2022) சூழலை உருவாக்குதல் (Built environmen) பிரிவில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி தேசிய அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது. ஆர்.எஸ்.புரம், பந்தய சாலை போன்ற பகுதிகளில் சிறந்த மாதிரி சாலைகள் அமைத்தல், வாலங்குளம், பெரியகுளம், குறிச்சிகுளம், முத்தன்னன்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்படுத்துதல் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்த விருதுக்கு கோயம்புத்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Advertisment
இந்திய அளவில் 52 நகரங்களில் இருந்து 88 முன்மொழிவுகள் விருதுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், திட்ட செயல்பாட்டில் சிறந்த சீர்மிகு நகரங்களுக்கான முதல் பரிசையும், இந்தியாவின் தெற்கு மண்டல பிரிவில் கோயம்புத்தூர் பெற்றுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த நகரங்கள், சிறந்த திட்டப் பணிகள் மற்றும் புதுமையான திட்டப் பணிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரில் இந்திய குடியரசுத் தலைவரால் ந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil