இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து - விசாரணைக்கு ஆஜரானது ஏன் : கமல் விளக்கம்
Kamalhassan on Indian 2 accident : இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்தில் இறந்தவர்களுக்கு செய்யும் கடமையாக எண்ணி இங்கு ஆஜராகி இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்தில் இறந்தவர்களுக்கு செய்யும் கடமையாக எண்ணி இங்கு ஆஜராகி இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Advertisment
இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் படம் பெரும்வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தியன் 2 படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. பல்வேறு தடைகளை தாண்டி, இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு, தற்போது சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
விபத்து : கடந்த 19ம் தேதி இரவு படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன், எடை தாங்காமல், கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் துணை இயக்குனரும், கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகனுமான கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் பலியாயினர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
சம்மன் : இந்த விபத்து தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். கடந்த மாதம் 27ம் தேதி, இயக்குனர் ஷங்கர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
கமல் ஆஜர் : இதனிடையே, இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு நடிகர் கமல்ஹாசன் ஆஜராகி விளக்கம் அளித்தார். 2.30 மணிநேர விசாரணைக்குப்பின் வெளியே வந்த கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை எடுத்துக்கூறினேன். உயிர் தப்பியோரில் நானும் ஒருவன், விபத்தில் இறந்தவர்களுக்கு செய்யும் கடமையாக எண்ணி ஆஜராகி விளக்கம் அளித்தேன். படப்பிடிப்பில் விபத்து நடக்காமல் தடுப்பது குறித்தும் போலீசாரிடம் ஆலோசித்தேன். விரைவில் எங்களது துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் விபத்துக்களை தடுப்பது குறித்து சந்தித்து பேசவுள்ளோம் என்று நடிகர் கமல் தெரிவித்தார்.