சினிமா ஊழியர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் – லைகா நிறுவனத்திற்கு கமல்ஹாசன் கடிதம்

Kamalhassan letter to lyca productions : படப்பிடிப்பு தளத்தில் சினிமா ஊழியர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும், விபத்து நேர்ந்தால் தயாரிப்பு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்று லைகா புரொடக்சன் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

By: Updated: February 25, 2020, 02:38:37 PM

படப்பிடிப்பு தளத்தில் சினிமா ஊழியர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும், விபத்து நேர்ந்தால் தயாரிப்பு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்று லைகா புரொடக்சன் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்புக்கான செட் அமைக்கும் பணி சென்னையை அடுத்த ஈவிபி பிலிம்சிட்டியில் நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி, படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த விபத்தில் துணை இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் பலியாயினர். படுகாயமடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம், தமிழ் திரைப்படத்துறையினர் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான லைகா, மற்றும் கிரேன் அபரேட்டர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இழப்பீடு : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, கமல்ஹாசன் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியுள்ளார். அதேபோல், பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன் நிறுவனமும் இழப்பீடு அறிவித்துள்ளது.

கடிதம் : இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், லைகா நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். விபத்து ஏற்பட்டால் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். இதுபோன்ற விபத்துகள், படப்பிடிப்புக் குழுவினரின் மன உறுதி, நம்பிக்கையைக் குலைக்கும். விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு முழுமையாக, உடனடியாக தரப்பட வேண்டும். எந்தவொரு படப்பிடிப்பையும் தொடங்கும் முன்பு பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்று பரிசோதிக்க, நாம் ஒரு நடைமுறையை உருவக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Indian 2kamalhassanlyca productions

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X