சென்னை மெரினாவில் நாளை மறுநாள் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலினுடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங் பங்கேற்க உள்ள நிலையில், ராணுவத்தின் முப்படை தளபதிகளும் இந்த நிகழ்ச்சியில், பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் 8-ந் தேதி விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் அக்டோபர் 8-ந் தேதி 92-வது விமானப்படை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில், நாளை மறுநாள் ஏர்ஷோ என்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மும்படை தளபதிகளுடன், முதல்வர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக 2 நாட்கள் ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை சாகச நிகழ்ச்சியை காலை 11 முதல் பகல் 1 மணிவரை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 6ந் தேதி விமான சாகச நிகழ்ச்சிகளும், அக்டோபர் 8-ந் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில், வீரர்கள் அணிவகுப்பும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், விமானப்படை போர் விமானங்கள், ஹெலிகாப்டர் சாரங், மற்றும் சூர்யகிரன் வான் சாகச குழுக்கள் பங்கேற்க உள்ளது. இந்த நிகழ்வுகளை பார்க்க பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்பட் உள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோருடன் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவியும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக சென்னை மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த 2003-ம் ஆண்டு சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 21 ஆண்டுகள் கழித்து விமானப்படை தினத்தன்று, சென்னை மெரினாவில், சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. மேலும் நிகழ்ச்சியை பார்க்க வரும் பொதுமக்களுக்காக, குடிநீர் வசதி, பாதுகாப்பு, மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்ய்பபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“