ரஃபேல் மற்றும் பிற ஜெட் விமானங்கள் காற்றை கிழித்துக் கொண்டு பறந்ததால் மெரினா கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விமானிகளின் சாகசங்களைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி, அக்டோபர் 6-ம் தேதி, விமான கண்காட்சி நடத்தப்பட உள்ளது. மெரினாவில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் 72 விமானங்கள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சனிக்கிழமையன்று, விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்தது. இதனால், தாம்பரம் விமானப்படை (IAF) நிலையம் அருகே வசிப்பவர்கள் தங்கள் மொட்டை மாடிகளுக்குச் சென்று ஒத்திகையை கண்டுகளித்தனர். மேலும், பலர் விமானங்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க முயன்றனர்.
ஜெட் விமானங்கள் தலைக்கு மேலே குறைவான உயரத்தில் டைவ் செய்வதைப் பார்த்தோம். மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடிய தருணம். இருப்பினும் இரைச்சல் அதிகமாக இருந்தது என்று குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
இதனிடையே வரும் நாட்களில் பயிற்சி அமர்வுகள் அதிகரிக்கும். விமானங்கள் ஒத்திகை நடத்துவதை குடியிருப்பாளர்கள் பார்க்க முடியும். அனைத்து 72 விமானங்களும் பயிற்சியில் பங்கேற்கும். அக்டோபர் 4 அன்று முழு ஒத்திகை நடைபெறும் என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்டோபர் 6 ஆம் தேதி, எலைட் ஆகாஷ் கங்கா ஸ்கை டைவிங் குழு, சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம் மற்றும் சாரங் ஹெலிகாப்டர் டிஸ்ப்ளே டீம் ஆகியவை ஸ்டண்ட் நிகழ்ச்சிகளை செய்யும். சுமார் 15 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 6 ஆம் தேதி சென்னைவாசிகள் விமானப்படை சாகசக் காட்சியைக் காண விரும்புகிறோம் என 2024 ஆம் ஆண்டுக்கான விமானப்படை தின அணிவகுப்புக்கான தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரியான ஏர் வைஸ் மார்ஷல் கே. பிரேம் குமார் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“