சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய விமானப்படையின் இலக்குர ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்று மிக்ஜாம் புயலாக மாறியதை தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பல பகுதிகளில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் புகுந்ததால் வீட்டில் இருந்து வெளியேறிய பலரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில், உணவு மற்றும் அத்தியாவசிய தேவைக்காக மற்றவர்களின் உதவியை கூட பெற முடியாத நிலையில் தத்திளித்து வருகின்றனர். மக்களின் பசியை போக்கும் வகையில் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் உணவுகளை வழங்கி வருகின்றனர்.
இதனிடையே சென்னையில் அடையாறு மற்றும் துறைமுகம் பகுதியில் தாம்பரம் விமானப்படையின் சார்பில் இலக்குரக ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. இது குறித்து டிஃபென்ஸ் பி.ஆர்.ஓ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சென்னயைில் அடையாறு மற்றும் துறைமுகம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 பாக்கெட் நிவராண பொருட்கள் வழங்கப்பட்டது.
Air Force Station, Tambaram carried out Humanitarian Assistance and Disaster Relief operations in the areas affected by the #CycloneMichaung #Chennai today evening . 500 packets of relief material were dropped in the general area of Adyar and close to Harbour. @IAF_MCC pic.twitter.com/dOSHR2rCAZ
— Defence PRO Chennai (@Def_PRO_Chennai) December 5, 2023
மேலும் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளில் நிவாரணப் பொருட்களை வினியோகிக்க பல நடவடிக்கைகள் தொடங்கப்படும். இந்த நடவடிக்கை தமிழக அரசுடன் இணைந்து நடத்தப்படுகிறது என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல் இந்திய கடற்படை சார்பில் மடிப்பாக்கம் பெரியார் நகர் மற்றும் ராம் நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு வெள்ள நிவாரணக் குழுவினர் உதவி செய்து வருகின்றனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.