Advertisment

ஸ்டாலின் பகிர்ந்த ட்வீட் நீக்கப்பட்ட விவகாரம்: ராணுவம் தலைமையகம் விளக்கம்

பெண் ராணுவ ஜெனரலுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த ட்வீட் நீக்கப்பட்ட விவகாரத்தில் ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian Army explanation for deleting tweet lauded by TN CM MK Stalin Tamil News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுபகிர்வு செய்த டிவீட்டை ராணுவத்தின் வடக்கு தலைமையகம் நீக்கியது.

தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றதாக ராணுவத்தின் வடக்கு தலைமையகம் டிவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த பதிவை மறுபகிர்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

Advertisment

இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுபகிர்வு செய்த டிவீட்டை ராணுவத்தின் வடக்கு தலைமையகம் நீக்கியது. இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி முதலமைச்சரின் டிவீட் பதிவை ராணுவம் நீக்க காரணம் என்ன? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், பெண் ராணுவ ஜெனரலுக்கு வாழ்த்து தெரிவித்து, ராணுவத்தின் வடக்கு கமாண்ட் பதிவிட்ட டிவீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த நிலையில், அது நீக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வான முதல் பெண் ராணுவ ஜெனரலை வாழ்த்துகிறோம். முதல் பெண் ஜெனரல் குறித்த செய்தியை ராணுவத் தலைமையகம் பகிர்வதற்கு முன்னதாகவே வடக்கு தலைமையகம் பகிர்ந்ததால் டிவீட் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது ராணுவ தலைமையகம் பகிர்ந்த டிவீட்டை வடக்கு பிராந்திய தலைமையகம் மறுபகிர்வு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Mk Stalin Indian Army Cm Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment