சேலம் ராணுவ வீரரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்
Indian army : மதியழகனின் வீர மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி, அவரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த காசோலையை, கலெக்டர் ராமன், மதியழகனின் மனைவியிடம் வழங்கினார்.
இந்திய எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
Advertisment
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவர், ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வருகிறார். மதியழகன், தற்போது ஜம்மு காஷ்மீர் மாவட்டம் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக்கோட்டு பகுதியினருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம், அத்துமீறி எல்லைப்பகுதியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இதில், மதியழகன் பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவரது உடல் சாலைவழியாக காஷ்மீருக்கும், பின் அங்கிருந்து விமானம் மூலம் கோவைக்கும், பின் அங்கிருந்து சேலத்துக்கும் கொண்டு வரப்பட்டது.
சித்தூரில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட மதியழகனின் உடலுக்கு கலெக்டர் ராமன், போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின், 21 குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் மதியழகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முதல்வர் நிதியுதவி : மதியழகனின் வீர மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி, அவரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த காசோலையை, கலெக்டர் ராமன், மதியழகனின் மனைவியிடம் வழங்கினார்.
மதியழகனுக்கு தமிழரசி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil