அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாகர்கோவில் பகுதியில் காவல்துறை உத்தரவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் சார்பில், உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில், பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கோவில், திறப்பு விழா (ஜனவரி 22) இன்று நடைபெறுகிறது. இதற்காக கடந்த ஒரு மாத காலமாக சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகள் ஏற்றுமாறு கோரிக்கையும் வைக்கப்பட்டது.
மேலும், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், அரிச்சல் முனை உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு தரிசனம் செய்த நிலையில், சினிமா நட்சத்திரங்கள் பலருக்கும், ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகை சுகன்யா, மற்றும் பாடகி சித்ரா ஆகியோர் ராமர் கோவில் தொடர்பான பாடல்கள் வெளியிட்டிருந்தனர்.
இதனிடையே இந்தியா முழுவதும், ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டங்கள், இருந்தாலும், தமிழகத்தில் ராமர் கோவில் திறப்பு விழா குறித்து எதிர்ப்புகள் இருந்து வருகிறது. ராமர் கோவில் திறப்பு நாளான இன்று, தமிழகத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும், ராமர் பெயரில் அன்னதானம் வழங்க முடியாது என்று தமிழக அரசு மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
TN govt has banned watching live telecast of #AyodhaRamMandir programmes of 22 Jan 24. In TN there are over 200 temples for Shri Ram. In HR&CE managed temples no puja/bhajan/prasadam/annadanam in the name of Shri Ram is allowed. Police are stopping privately held temples also… pic.twitter.com/G3tNuO97xS
— Nirmala Sitharaman (@nsitharaman) January 21, 2024
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்து அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.
In the Thovalai Murugan Temple , located in Nagercoil, permission is being denied to put up LED screens for live telecast. Order by police seen below. No watching @PMOIndia citing any law and order situation that “might” arise. pic.twitter.com/VkDbgOpRGl
— Nirmala Sitharaman (@nsitharaman) January 22, 2024
அதேபோல் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், நாகர்கோவில் பகுதியில், தோவாளை முருகன் கோவிலில், ராமர் கோவில் திறப்பு தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய எல்.இ.டி ஸ்கிரீன்களை வைக்க, அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கான காவல்துறை உத்தவும் உள்ளது. பிரதமர் மோடி இயக்கக்கூடிய சட்டம் ஒழுங்கை மேற்கோள் காட்டி உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.