Advertisment

70 ஆண்டு கால முயற்சிகளை சீரழித்த பா.ஜ.க... பெண்கள் அதிகாரம் நாட்டுக்கு வலிமை : சோனியா காந்தி பேச்சு

மரபுவழி மற்றும் ஆணாதிக்க சமூகம், கலாச்சார சலுகைகளை எல்லாம், மீறி பெண்கள் மிக அருமையான சாதனைளை செய்திருக்கிறார்கள்.

author-image
WebDesk
New Update
Somia Gandh

மகளிர் உரிமை மாநாட்டில் சோனியாக காந்தி

திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணி கட்சியின் பெண் தலைவர்களாக, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முக்தி, மற்றும் கனிமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள திமுக பெண் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

மாலை 6 மணியளவில் தொடங்கிய இந்த மாநாட்டில் முன்னதாக பெண் நிர்வாகிகள் பாடல் பாடுவது நடனமாடுவது உள்ளிட்ட நிகழ்வுகள் பங்கேற்று மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மாநாடு தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேச தொடங்கினார். அவரது பேச்சை காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் மொழி பெயர்த்து பேசினார்.

மாநிலம், மொழி, சாதி மத நம்பிக்கை இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, எல்லோரையும் சமத்துவமாக பார்க்கக்கூடிய ஒரு சமத்துவமான தத்துவத்திலே, கலைஞர் நம்பிக்கை கொண்டிருந்தார். தனது வாழ்நாளில் அதிகமாக பேசப்படாத பாலின சமத்துவத்தை, சிந்தித்து அதற்காக போராடுகின்ற ஒரு போராளியாக, தன்னைஅடையாளப்படுத்திக் கொண்டார்.

நமது பெண்கள் இந்தியாவிலே மிக மகத்தான சாதனைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். மரபுவழி மற்றும் ஆணாதிக்க சமூகம், கலாச்சார சலுகைகளை எல்லாம், மீறி அவர்கள் மிக அருமையான சாதனைளை செய்திருக்கிறார்கள். இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்திருகின்றன. ஆனால் இன்று இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் மின்னுகிறார்கள். விஞ்ஞானம், அறிவு, ஆற்றல் என பெண்கள் ஆற்றுகின்ற பணி மகத்தானது.

இந்த போராட்டம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். பல்வேறு தடைகளை தாண்ட வேண்டும். இருந்தாலும் நமது ஏழை எளிய சகோதரிகள், ஏராளமான தடைகளை தாண்டித்தான், இந்த சமத்துவத்தை பெருவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. மகாத்மா காந்தியின் தலைமையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட சாத்தீகமான வன்முறையற்ற போராட்டம், மகளிர் சமத்துவத்தை முன்னிலைபடுத்தியது. 1928 அரசியல் சாசன சட்ட வரைவு, மோதிலால் நேரு அவர்களின் தலைமையிவலான குழு, தயார் செய்து அறிக்கை சமர்பித்தது.

அதன்பிறகு கராச்சியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், இந்த தேசத்தின் முதல் பிரதமர் ஜவர்லால் நேரு அவர்கள்.கராச்சி தீர்மானம் என்ற பெயரில், கொண்டுவந்த 2 தீர்மானங்களும், பெண்களின் உரிமைகளை கொண்டாடுவதிலும், அவர்களுக்கு வாக்குரிமை அளிப்பதிலே, சமத்துவத்தை வழங்க வேண்டும் என்பதிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் செயல்பாடுகளில், சரியான பங்கு தரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.

இந்த இரண்டு ஆவணங்களும், தந்த அடிப்படையில் தான் நம்முடைய பெண்கள், இவ்வளவு பெரிய ஒரு சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பை நோக்கி பார்ப்பதற்கு முனைந்தார்கள். இதைத்தான் எல்லோருக்குமான பாலின சமத்துவம் அறம் சார்ந்த சமூகம், இவர்கள் அனைத்தும் ந்த 2 ஆணவங்களில் சொல்லப்பட்ட அந்த விஷயங்கள் தான், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியல் சாசன சட்டத்தினை, வரையெறுக்கும்போது இந்த தத்துவங்களை உள்வாங்கி, அதை மேலெடுத்து செல்லக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினார்.

ஒரு ஆணை நீ படிக்க வைத்தால் ஒரு தனி நபரை மட்டும் நீ படிக்க வைக்கிறாய், அதே சமயம் நீ ஒரு பெண்ணை படிக்க வைத்தால், ஒரு குடும்பத்திற்கே கல்வி கற்றுத்தரப்படுகிறது. மகளிரை அதிகாரப்படுத்தினால், இந்தியாவை அதிகாரப்படுத்துகிறோம் என்கிற ஜவகர்லால் நேரு அவர்களின் வார்த்தைகளை யார் மறக்க முடியும். பெண் எப்படி தலைமையேற்று செயல்பட முடியும் என்பதற்கான எடுத்தக்காட்டு, ஏழை எளிய மக்களுக்கான, நல்வாழ்வை அளிப்பதற்கும், வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்போடும், இவர்கள் ஆற்றிய பணியை, யாராலும் மற்ற முடியாது.

வரலாற்று சிறப்பு மிக்க 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை, பெண்களுக்காக பஞ்சாயத்ராஜ் சட்டத்திலும், உள்ளூர் ஆட்சி அமைப்புகளிலும், கொண்டுபோய் சேர்த்துள்ளனர். இந்த சட்டத்திருத்தம் சமூகத்தின் அடித்தளத்திலே, ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, பெண்களுக்கு தலைமை பொறுப்புகளை அளித்து, ஒரு பெரிய சமூக புரட்சிக்கு வித்திடுகின்ற, மிகப்பெரிய திட்டமாக அது அமைந்தது. ராஜூ காந்தி அவர்கள் ஏற்படுத்திக்கொடுத்த 33 விழுக்காடு இட ஒதுக்கீடு தான், இன்று பாராளுமன்றத்திலே மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு ஒதுக்கப்பட வேண்டும்  என்ற சட்டத்தின் முன்னெடுப்பாக அமைந்துள்ளது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காக, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் பல எதிர்ப்புகளை சந்தித்தது.

மகளிர் இடஒதுக்கீட்டுக்கான சட்டம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், 2010- மார்ச் மாதம் 9-ந் தேதி, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் ஒரு கருத்தொற்றுமையை உருவாக்க முடியாத காரணத்தினால், அந்த சட்டத்தினை நிறைவேற்ற முடியவில்லை. இப்போது இந்த சட்டம் நிறைவெறி இருக்கிறது என்று சொன்னாலும் கூட, இதற்காக நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், நாம் கொடுத்த அழுத்தங்களும் அதிகம். ஆனால் இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று தெரியாத சூழல் தான் நிலவுகிறது.

தமிழகத்தில் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் பெண்களில் வாழ்க்கையில், பல புரட்சிகரமான மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தந்தது. அதன் அடிப்படையில் தான் இன்று தமிழ்நாடு இந்தியாவே புகழ்ந்து கொண்டாடக்கூடிய, மகளிர் உரிமைகளிலும் சமத்துவத்திலும், ஒரு ஒளிவிளக்காக திகழ்கிறது என்று சொன்னால், அது மிகையாகாது. கடந்த 9 ஆண்டுகளாக மோடி அரசின் நடவடிக்கைகள், நாம் ஏற்று்ககொண்ட திட்டங்கள், நாம் பெற்றுத்தந்த உரிமைகள், கடந்த 70 ஆண்டுகளில் நாம் செய்த நல்ல முயற்சிகள் எல்லாம், சீரழிக்கின்ற வகையில், ஈடுபடுவது நமக்கு ஏற்படுகின்ற மிகப்பெரி துரதிஷ்டம்.

ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட பாரம்பரிய முறையில் தான் பெண்கள் இருக்க வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறதே தவிர, அவர்களுக்காக ஒரு புதிய சுதந்திரத்தையும் உரிமையையும் அளிக்க அவர்கள் தயாராக இல்லை. இதேபோல் தான் எல்லா துறைகளிலும் எல்லா சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும், அறம் சார்ந்த சமுதாயத்திற்குமாக நாம் பெற்ற அனைத்து உரிமைகளும் கடந்த 9 ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டு வருகிறது என்று பேசியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sonia Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment