இந்திய பெருங்கடல் பகுதியின் இந்தியாவின் கப்பற்படை மற்றும் விமானப்படையின் பலத்தை வலுப்படுத்தும் வகையில், தஞ்சாவூர் விமானப்படை தளத்தில், பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட சுகோய் - 30 எம்கேஐ போர்விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
சுகோய் போர்விமானங்கள் இணைக்கப்பட்டுள்ள இந்த படைக்கு, 222 டைகர்ஷார்க்ஸ் (222 Tigersharks) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படை இந்தியாவின் மிகவும் வலிமையான விமானப்படை அணியாகும் . இந்த சுகோய் 30 எம்கேஐ பிரம்மோஸ் ஏவுகணையை தாங்கி சென்று தாக்க கூடிய வலிமைப்படைத்தது. இதன் மூலம் தென்னிந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். முக்கிய எல்லை அருகே அடிக்கடி சுகோய் 30 எம்கேஐ இனி ரோந்து செல்லும்.
இந்த 222 டைகர் ஷார்க்ஸ் முதலில், 1969ம் ஆண்டில் அம்பாலாவில் ஏற்படுத்தப்பட்டது. பின் 1971ம் ஆண்டில் ஹல்வாராவிற்கு மாற்றியமைக்கப்பட்டது. 1971ம்ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானிற்கு எதிரான போரில், இந்த படையின் பங்கு அளப்பரியது.
தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் , 222 டைகர்ஷார்க்ஸ் படையை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ஏர் சீப் மார்ஷல் ஆர் கே எஸ் படவுரியா, டிஆர்டிஓ தலைவர் ஜி சதீஷ் ரெட்டி, ஏர் கமாண்டிங் சீப் ஆபிசர் ஏர் மார்ஷல் அமித் திவாரி, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி மாதவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
பிபின் ராவத் பேசியதாவது, 222 டைகர்ஷார்க்ஸ் படை சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் படைபலத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கும். இந்திய விமானப்படை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், டிஆர்டிஓ, பிரம்மோஸ் உதவியின்றி இந்த படை உருவாககியிருக்காது. றது. பாதுகாப்பு நோக்கில், கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கு, ஒவ்வொரு நாட்டுக்கும், சுதந்திரம் உள்ளது.குறிப்பாக, வணிக இயக்கம் நடைபெறும் கடல் வழியில், கொள்ளையர்களின் ஆதிக்கத்தைத் தடுக்க, கண்காணிப்பு செய்வது இயல்பானது. நம் படைப் பிரிவை, நாம் தரம் உயர்த்தியாக வேண்டும் என்பதால், தஞ்சாவூரில் இந்த படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இதில் அதிகளவு வீரர்கள் சேர்க்கப்பட்டு, படைப் பிரிவு விரிவுப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.