எனது தமிழக வருகை சிலருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது - சென்னை பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் மோடி பேச்சு

PM Modi Tamil Nadu Visit Live : கடந்த ஒரு வாரத்தில் 2-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயணம் குறித்து தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

PM Modi Tamil Nadu Visit Live : கடந்த ஒரு வாரத்தில் 2-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயணம் குறித்து தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
modi chennai

பிரதமர் மோடி சென்னை வருகை நேரலை

PM Narendra Modi Tamil Nadu Visit Live : அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். பிற்பகல் 1.15 மணிக்கு மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர்,  சென்னை வந்து ஹெலிகாப்டர் மூலம், கல்பாக்கம் செல்கிறார். அங்கு 3.30 மணிக்கு கல்பாக்கம் அணுஉலை ரியாக்டர் மையத்தை பார்வையிடுகிறார்.

Advertisment

மாலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் தாமரை மாநாடு என்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பிரதமர் மோடி தமிழக வருகையை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல் சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நந்தனம் பொதுக்கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்திற்கு செல்கிறார். கடந்த ஒரு வாரத்தில் பிரதமர் மோடி 2-வது முறையாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

  • Mar 04, 2024 20:37 IST

    16 வயதில் தேசத்திற்காக வீட்டை விட்டு வெளியேறினேன் - மோடி

    எனது 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன் எதற்காக வெளியேறினேன்? யாருக்காக வெளியேறினேன்? இந்த தேசத்திற்காக வெளியேறினேன். நீங்கள்தான் என் குடும்பம் என சென்னை பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்



  • Mar 04, 2024 20:10 IST

    தேசத்தை தூய்மை ஆக்கியே தீருவேன் - மோடி

    ஊழல் கட்சிகளால் அரசியலில் இருந்து இளைஞர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள்'. தேசத்தை தூய்மை ஆக்கியே தீருவேன் என சென்னை பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்



  • Advertisment
    Advertisements
  • Mar 04, 2024 19:54 IST

    தி.மு.க அரசுக்கு மக்களின் துயரங்களை பற்றி கவலையில்லை - மோடி

    தி.மு.க அரசுக்கு மக்களின் துயரங்களை பற்றி கவலையில்லை. மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு, உங்கள் வேதனையை புரிந்து கொள்கிறது, உங்களுக்காக பணியாற்றுகிறது என சென்னை பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்



  • Mar 04, 2024 19:49 IST

    எனது தமிழக வருகை சிலருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது - மோடி

    ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போது உற்சாகம் அடைகிறேன். சமீப காலங்களில் எனது தமிழக வருகை சிலருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என சென்னை பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்



  • Mar 04, 2024 19:38 IST

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்திய மக்கள் என்னுடைய சொந்தங்கள் - மோடி

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்திய மக்கள் என்னுடைய சொந்தங்கள். இந்த நாடு தான் எனது குடும்பம், நாட்டு மக்கள் தான் எனது குடும்பம் என சென்னை பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்



  • Mar 04, 2024 19:18 IST

    மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கு தி.மு.க அரசு இடையூறாக இருக்கிறது - மோடி

    மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கு தி.மு.க அரசு இடையூறாக இருக்கிறது. இயற்கை பேரிடர் ஏற்பட்ட போது மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக விளம்பரம் மட்டுமே செய்தார்கள் என சென்னை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்



  • Mar 04, 2024 19:02 IST

    சென்னை வெள்ளநீர் மேலாண்மையை தி.மு.க அரசு சரியாக செய்யவில்லை - மோடி

    சென்னையில் வெள்ளநீர் மேலாண்மையை தி.மு.க அரசு சரிவர செயல்படுத்தவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என சென்னை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.



  • Mar 04, 2024 18:40 IST

    தனது குடும்பத்தை பார்க்க மோடி வந்துள்ளார் - அண்ணாமலை

    தனது குடும்பத்தை பார்க்க பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் என சென்னையில் நடைபெறும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை கூறினார்



  • Mar 04, 2024 16:46 IST

    மோடியை வரவேற்கத் திரண்ட பா.ஜ.க-வினர்

    கல்பாக்கத்தில் 500 மெகாவாட் ஈணுலையை தொடங்கி வைக்க வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க பா.ஜ.க-வினர் கல்பாக்கம் பகுதியில் திரண்டுள்ளனர்.



  • Mar 04, 2024 16:03 IST

    கல்பாக்கம் சென்றார் மோடி

    பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த நிலையில், சென்னை விமான நிலயத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக கல்பாக்கம் சென்றார். அங்கே கல்பாக்கத்தில் 500 மெகாவாட் வேக ஈணுலையைத் தொடங்கி வைக்கிறார்.



  • Mar 04, 2024 15:44 IST

    சென்னை விமான நிலையத்தில் இருந்து கல்பாக்கம் புறப்பட்டார் மோடி

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னை விமனா நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் புறப்பட்டார்.



  • Mar 04, 2024 15:31 IST

    சென்னை வந்தடைந்தார் மோடி

    பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலயத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் கல்பாக்கம் செல்கிறார். கல்பாக்கத்தில் 500 மெகாவாட் வேக ஈணுலையைத் தொடங்கி வைக்கிறார்.



  • Mar 04, 2024 15:30 IST

    மோடி சென்னை வருகை -  காங்கிரஸ் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

     

    பிரதமர் மோடி வருகையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள 500 மெகா வாட் திறன் கொண்ட பாவனி என்கிற அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைக்கிறார்.

    பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி காட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • Mar 04, 2024 14:38 IST

    மோடியின் குடும்பத்தில் நாங்கள் : ஜே.பி.நட்டா, அமித்ஷா சமூகவலைதள பதிவு வைரல்

    பா..க தேசியத் தலைவர் ஜேபி நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியின் 'மோடி கா பரிவார், மேரா பாரத் மேரா பரிவார்' (மோடியின் குடும்பம், எனது இந்தியா-எனது குடும்பம்) என்று தங்களது எக்ஸ் தள சுயவிபரத்தில் இணைந்துள்ளனர்.



  • Mar 04, 2024 13:42 IST

    நான் நாளை சென்னையில் இருப்பேன் : பிரதமர் மோடி தமிழில் ட்விட்

    கடந்த ஒரு வாரத்தில் 2-வது முறையாக சென்னை வரும் பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் நான் நாளை, மார்ச் 4ம் தேதி சென்னையில் இருப்பேன், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுகிறேன். மேலும் நகரில் பா.ஜக. சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.



  • Mar 04, 2024 13:38 IST

    சென்னை வரும் பிரதமர் மோடி : காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி போராட்டம்

    கடந்த ஒரு வாரத்தில் 2-வது முறையாக சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடந்தப்பட்டது. இதில் வெள்ள நிவாரணம் கொடுக்காத மோடி தமிழகத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார் என்று விமர்சித்து வருகின்றனர்.



  • Mar 04, 2024 12:15 IST

    பிரதமர் மோடி சென்னை பயணம் : பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு

    பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மற்றும் காவல்துறையில் இருந்து 15000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 29-ந் தேதி வரை சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • Mar 04, 2024 12:12 IST

    பிரதமர் மோடி சென்னை வருகை : முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

    பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மத்திய கைலாஷ் முதல் ஹால்ட் சந்திப்பு வரை,  இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திபாரா சந்திப்பு, பூன்னம்ல்லி சாலை ராமாவரம் முதல் கத்திபாரா சந்திப்புவரை அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை, தேனாம்பேட்டை, நந்தனம், காந்தி மண்டபம் சாலை வரை வணிக வாகங்கள் செல்ல, பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.



PM Narendra Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: