coonoor | nilgiris | குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே வரலாற்று சிறப்புமிக்க நீலகிரி மலை ரயில் பாதையில் (என்எம்ஆர்) கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, இந்திய ரயில்வே புதன்கிழமை (நவம்பர் 22) ரயில் சேவைகளை நிறுத்தியது.
மோசமான வானிலை காரணமாக கல்லாறு மற்றும் ரன்னிமேடு இடையே அமைந்துள்ள ஹில்குரோவில் மண் சரிவு ஏற்பட்டது, இதனால் தண்டவாளத்தில் மண் உள்ளிட்ட பொருள்கள் அடைக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே தெற்கு சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்துவருகிறது.
இந்த நிலையில், ஈரோடு அன்னை சத்யா நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சந்தைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதற்கிடையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“