Advertisment

'இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்தில் மூவர் பலி - லைக்கா நிறுவனம் மீது வழக்குப்பதிவு

Indian 2 accident updates : இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து குறித்த உடனடி அப்டேட்களை அறிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்தில் மூவர் பலி - லைக்கா நிறுவனம் மீது வழக்குப்பதிவு

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வந்தது. பிரமாண்டமான வகையில் செட் அமைக்கப்பட இருந்ததால் அதற்கான பணிகளில் இரவு பகலாக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.

Advertisment

இந்நிலையில், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Indian 2 accident updates : இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து குறித்த உடனடி அப்டேட்களை அறிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.














Highlights

    21:20 (IST)20 Feb 2020

    லைக்கா மீது வழக்கு

    இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக லைக்கா நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

    17:58 (IST)20 Feb 2020

    2 கோடி இழப்பீடு - லைக்கா

    படப்பிடிப்பு விபத்தில் உயிர் இழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு மொத்தம் 2 கோடி இழப்பீடு - லைகா நிறுவனம் அறிவிப்பு. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சமும், மீதி உள்ள தொகையை ஃபெப்சி யூனியன் மூலம் காயமடைந்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்

    17:13 (IST)20 Feb 2020

    கமல்ஹாசன் நிகழ்ச்சிகள் ரத்து

    நாளை (21/02/2020) அன்று நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்வுகளில் கமல்ஹாசன் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

    16:39 (IST)20 Feb 2020

    இரவு 9.30 மணிக்கு விபத்து ஏற்பட்டது - போலீஸ் அதிகாரி

    இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில், இந்த விபத்தை விசாரிக்கும் உயர் காவல்துறை அதிகாரியிடம் பேசுகையில் அவர், 'இந்த விபத்து இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. ஷூட்டிங்கின் போது லைட்டிங் செட் அமைக்கப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டது. இறந்த மூவரின் போஸ்ட் மார்டம் இதுவரை முடியவில்லை. அது முடிந்த பிறகே இதர விசாரணை தொடங்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

    16:16 (IST)20 Feb 2020

    ரூ.1 கோடி நிதியுதவி

    இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்தில் பலியான மூவரின் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

    15:56 (IST)20 Feb 2020

    சரத்குமார் இரங்கல்

    இந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    15:15 (IST)20 Feb 2020

    கமல்ஹாசன், லைகா சுபாஸ்கரன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வருகை

    இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் பலியானவர்களின் உடல்கள், உடற்கூறு ஆய்விற்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன், மருத்துவமனை வருகை தர உள்ளனர்.

    14:54 (IST)20 Feb 2020

    அர்ச்சனா கல்பாத்தி இரங்கல்

    இந்தியன் 2 விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்திருக்கும் அர்ச்சனா கல்பாத்தி.  

    14:43 (IST)20 Feb 2020

    யோகி பாபு ட்வீட்

    இந்தியன் 2 படபிடிப்பில் நடந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கலும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்து நடிகர் யோகிபாபு ட்வீட் செய்துள்ளார்

    14:38 (IST)20 Feb 2020

    ஹரீஷ் கல்யான் ட்வீட்

    14:17 (IST)20 Feb 2020

    இந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது - தனுஷ்

    ”இந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது , இனி நடக்கக் கூடாதது .உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் , மருத்துவமனையில் இருப்பவர்கள் விரைவில் குணமடையவும் அக்குடும்பத்தில் ஒருவனாய் இறைவனை பிராத்திக்கிறேன்" என நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

    14:16 (IST)20 Feb 2020

    உதவி ஆணையர் தகவல்

    இந்த விபத்து வழக்கை விசாரிக்கும் உதவி ஆணையரிடம் பேசியபோது,  ’பிரேத பரிசோதனை நடக்கிறது. 30 நிமிடங்களுக்குள் அது முடிவடையும். மேலும் விவரங்கள் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தெரிவிக்கப்படும்’ என்றார்

    13:57 (IST)20 Feb 2020

    அம்ரிதா ஐயர் ட்வீட்

    அந்த இடம் நிறைய நெகட்டிவ் வைப்ரேஷன்களைக் கொண்டிருக்கிறது. பிகில் படபிடிப்பின் போதும், இப்படித்தான் நடந்தது என அம்ரிதா தெரிவித்துள்ளார். 

    13:37 (IST)20 Feb 2020

    கிரேன்கள் இன்னும் வெளியில் எடுக்கப்படவில்லை

    விபத்து நடந்த ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் விபத்துக்குக் காரணமான 2 கிரேன்கள் இன்னும் வெளியில் எடுக்கப்படாமல் உள்ளது. பத்திரிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் இருக்கிறார்கள். 

    12:59 (IST)20 Feb 2020

    பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை

    publive-image

    12:57 (IST)20 Feb 2020

    சுரேஷ் அல்லூரி இரங்கல்

    இந்தியன் 2 படபிடிப்பில் ஏற்பட்ட விபத்தை அறிந்து சோகமடைந்ததாகவும், இறந்தவர்களுக்கு இரங்கலையும், காயமடைந்தவர்க்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார் தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் அல்லூரி

    12:31 (IST)20 Feb 2020

    அல்லு அர்ஜுன் இரங்கல்

    இந்தியன் 2 படபிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

    12:12 (IST)20 Feb 2020

    பிரியா பவானி சங்கர் ட்வீட்

    இந்தியன் 2 படபிடிப்பில் இறந்த 3 பேருக்கும் தனது இரங்கலை தெரிவித்திருக்கும் பிரியா பவானி சங்கர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 

    11:56 (IST)20 Feb 2020

    வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி

    ’என்னுடைய இதயவலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ள உயிரிழந்த 3 பேருக்கும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். 

    11:15 (IST)20 Feb 2020

    லைகா நிறுவனம் இரங்கல்

    படபிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்தும், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் லைகா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    10:53 (IST)20 Feb 2020

    பூஜா குமார் இரங்கல்

    இந்தியன் 2 விபத்தில் இறந்தவர்களுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கும் நடிகை பூஜா குமார், உதவி இயக்குநர் கிருஷ்ணாவுடன் விஸ்வரூபம் படத்தில் பணியாற்றியுள்ளதாகவும், அந்த நினைவுகள் என்றும் நீங்காமல் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

    10:11 (IST)20 Feb 2020

    விபத்தில் பலியான புரொடெக்சன் உதவியாளர் அடையாளம் தெரிந்தது

    இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த கிரேன் விபத்தில் உதவி இயக்குனர், புரொடெக்சன் உதவியாளர் உள்ளிட்ட 3 பேர் பலியாயினர்.  புரொடெக்சன் உதவியாளர் மது, சமீபத்தில் நடிகர் அஜித் உடன் எடுத்த போட்டோ வெளியாகியுள்ளது.

    publive-image

    09:52 (IST)20 Feb 2020

    கமல்ஹாசன், சங்கர் நேரில் ஆறுதல்

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    09:51 (IST)20 Feb 2020

    பலர் காயம்

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த, மஞ்சாங், குமார், கலை சித்திரன், குணபாலன், திருநாவுக்கரசு, முருகதாஸ் உள்ளிட்ட 9 பேர் சவீதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    09:32 (IST)20 Feb 2020

    ரகுல் பிரீத் சிங் இரங்கல்

    இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து குறித்த செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக இப்படத்தில் நடித்து வரும் ரகுல் பீரீத் சிங் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    09:22 (IST)20 Feb 2020

    கார்ட்டூனிஸ்ட் மதனின் உறவினர் பலி

    இந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் பலியான கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் உறவினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    09:17 (IST)20 Feb 2020

    மயிரிழையில் உயிர்தப்பிய கமல், காஜல்

    கிரேன் விபத்து நிகழ்வதற்கு 10 விநாடிகள் முன்னரே, கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும் காஜல் அகர்வால், சம்பவ இடத்திலிருந்து வெளியேறியதாக காஸ்ட்யூம் டிசைனர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    publive-image

    09:11 (IST)20 Feb 2020

    கமல்ஹாசனின் மற்றொரு பதிவு

    இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்பதை குறிப்பிட்டு மற்றொரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

    மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.

    முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது.

    இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும். எனறு குறிப்பிட்டுள்ளார்.

    09:09 (IST)20 Feb 2020

    மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் - கமல்ஹாசன் இரங்கல்

    இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு இட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    Indian 2 accident updates : படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த விபத்தில் பலியானவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. உதவி இயக்குநரான கிருஷ்ணா மற்றும் படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்களுக்கு உணவு அளித்து வந்த மது, சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு : இந்த விபத்து தொடர்பாக, கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Tamil Nadu Kamal Haasan
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment