தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் 130 இந்திய வம்சாவளியினர் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர். உலகின் பலம் வாய்ந்த நாடான அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
இந்திய மரபுவழியினர் 200 பேர் 15 நாடுகளில் முக்கிய அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர். கூகுள், யூடியூப், மைக்ரோசாப்ட், அடோப், ஐ.பி.எம், ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட மிக முக்கியமான கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்திய மரபுவழியினர் பொறுப்பு வகிக்கின்றனர்.
அரபுநாடுகளில் சில்லறை வணிகம், கட்டுமானம், எரிசக்தி, தொழில்நுட்பம், நிதிச்சேவை, பங்குச்சந்தை, சேவைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரிய பொறுப்புகளில் ஜாம்பவான்களாக இந்திய மரபு வழியினர் உருவாகி வந்துள்ளனர். இப்படிப்பட்ட இந்திய மரபுவழிச் சமூகங்கள் சில உலகளாவிய அதிகாரங்களை கடந்த 50 ஆண்டுகளில் அடைந்துள்ளனர். முந்தைய காலம் போல அல்லாமல் தற்சமயம் இந்த சர்வதேச வாய்ப்புகள் இன்னும் விரிவடைந்து தகுதியுள்ள அனைவரும் அங்கே சாதனை படைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
செய்தி: என்.எம்.இக்பால், கன்னியாகுமரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“