இந்தியாவிலேயே தரம் குறைந்த மதுபானங்கள் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சாந்தியஹா புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, கூறியதாவது:
"1937ஆம் ஆண்டில் இருந்து 1971 வரை, தமிழ்நாட்டில் பூரணமான மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. 71ல் அன்றைய கலைஞர் ஆட்சியில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது.
தொடர்ந்து மது விலக்கு அமல்படுத்துவதும் தளர்த்தப்படுவதுமாக மாறி மாறி கடந்த 20 வருடமாக தமிழ்நாட்டில் மதுவிலக்கு தளர்தப்பட்டுத்தப்பட்டு டாஸ்மாக் என்ற நிறுவனமே மது கொள்முதல் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை நடத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே குடித்துக் கொண்டு இருந்த நிலை தற்போது மாறிவிட்டது. இப்பொழுது ஏறக்குறைய 60% பேர் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் உட்பட மதுபலக்கத்திற்கு ஆளாகி, உடல்நிலையை பதிப்பிற்குள்ளாக்குகிறார்கள்.
மது பழக்கத்தால் தொழிலாளர்கள் ஆட்டோ ஒட்டுநர்கள் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவிலேயே தரக்குறைவான மது தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மதுவினால் வீட்டிலும் நாட்டினுடைய நலனும் பாதிக்கப்படுகிறது. டாஸ்மார்க் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடைபெறுகிறது.
கட்சியின் சார்பாக வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழக முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வர வலிறுத்துவோம். தமிழகத்தில் உள்ள 5362 மதுபான கடைகளும் மூடப்பட வேண்டும்", என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil