கோவை டூ அபுதாபி; வாரத்திற்கு 3 நாள் விமான சேவை: ஆகஸ்ட் 10-ல் தொடங்கும் இண்டிகோ

கோவை விமான நிலையத்திலிருந்து வாரத்திற்கு 3 நாட்கள் அபுதாபிக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக இண்டிகோ அறிவித்துள்ளது. இந்த சேவையை வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

கோவை விமான நிலையத்திலிருந்து வாரத்திற்கு 3 நாட்கள் அபுதாபிக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக இண்டிகோ அறிவித்துள்ளது. இந்த சேவையை வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

author-image
WebDesk
New Update
 IndiGo Announces new direct flights from Coimbatore and Tiruchirappalli to Abu Dhabi Tamil News

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் பொருளாதார வளர்ச்சியில் தன்னை பெரிதும் நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. இங்கு பல தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால், இங்கே விமான சேவையை தொழிலதிபர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். மேலும் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியும் நடக்கின்றன.

Advertisment

இந்நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக சர்வதேச விமான நிலையமாக செயல்படும் கோவையில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பல மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா போன்ற நாடுகளுக்கும் இடையே விமான போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், கோவை விமான நிலையத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. 

இந்த நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வளைகுடா நாடான அபுதாபிக்கு விமான சேவை தொடங்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாரத்தில் மூன்று நாட்கள் (செவ்வாய், வியாழன், சனிக்கிழமை) இயக்க உள்ளதாகவும், காலை 7.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில் புறப்படும் இண்டிகோ விமானம் - பிற்பகல் 11:30 மணிக்கு அபுதாபி சென்றடையும் என தெரிவித்துள்ளது. அதேபோல், அபுதாபியில் பிற்பகல் 1 மணிக்கு கிளம்பும் இண்டிகோ விமானம் மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

இதேபோல், திருச்சியில் இருந்து அபுதாபிக்கு (திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை) வாரத்தில் 4 நாட்கள் விமானம் சேவை தொடங்கப்பட உள்ளது. காலை 7 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் புறப்படும் இண்டிகோ விமானம் பிற்பகல் 10 மணிக்கு அபுதாபி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விமான சேவையால் திருச்சி கோவை தொழில்துறையினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Coimbatore Trichy Indigo Airlines

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: