சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஞாயிற்றுக்கிழமையும் (ஜன.7,2024) நேற்றும் (திங்கள்கிழமை) ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ பிரம்மாண்ட அளவில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியா வளர தமிழ்நாடு முன்னணியில் உள்ளது” என்றார்.
இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கு பெற்றார்கள்.
இந்த மாநாட்டில் மொத்தம் ₹6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதில், தொழில்துறை, வர்த்தகம் ஆகியவற்றில் ₹3,79,809 கோடி முதலீடுகளும், ஆற்றல் துறைகளில் ₹1,35,157 கோடி முதலீடுகளும், சிறு குறு தொழில் நிறுவனங்களில் ₹63,573 கோடி முதலீடுகளும் கிடைத்துள்ளன.
மேலும், “வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறையில் ₹62,939 கோடி முதலீடுகள் வந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் (ஐடி) டிஜிட்டல் சேவைகள் துறைகளில் ₹22,130 கோடி முதலீடுகள் வந்துள்ளன.
இதன்மூலம் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மறைமுகமாக 12 லட்சதது 35 ஆயிரத்து 945 பேர் வேலை வாய்ப்பை பெற உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“