இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களை அழைத்துக்கொண்டு இன்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தது. ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மட்டும் இதுவரை மாலத்தீவு மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 2,700 இந்தியர்களை 'சமுத்ரா சேது' ஆபரேஷன் கீழ் திருப்பி அனுப்பியுள்ளது.
ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் இலங்கையின் கொழும்பிலிருந்து தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கு சுமார் 700 இந்தியர்களை ஜூன் 1-ம் தேத் அழைத்து வந்தது. ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல் மாலத்தீவுக்கு மூன்றாவது முறையாக பயணம் செய்தது.
இந்த மீட்பு பணி வந்தே பாரத் மிஷனின் கீழ் செயல்படும் 'சமுத்ரா சேது' ஆபரேஷனின் ஒரு பகுதியாகும். இது இதுவரை மே 8 மற்றும் மே 16 ஆகிய தேதிகளில் 2 முறை கிட்டத்தட்ட 2,700 பேரை வெளியேற்றுவதற்கு வசதி செய்துள்ளது.
ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல் மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவந்தது pic.twitter.com/VcNEMOFA7z
— IE Tamil (@IeTamil) June 7, 2020
இந்த நிலையில், ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மாலத்திவில் இருந்து 700 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு இன்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தது. கப்பலில் இருந்து பாதுகாப்பாக இறக்கப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
#INSJalashwa arrives in Tuticorin port with 700 Indian nationals evacuated from #Maldives. So far 2874 Indians have been repatriated in Op #SamudraSetu.#VandeBharatMission#हरकामदेशकेनाम#IndiaFightsCorona @DefenceMinIndia @indiannavy @SpokespersonMoD @DDNewslive @airnewsalerts pic.twitter.com/Ad2hQXE5fI
— PRO Defence Mumbai (@DefPROMumbai) June 7, 2020
இது குறித்து, மும்பை பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் டுவிட்டரில் “ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மாலத்திவில் இருந்து 700 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு இன்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தது. இதுவரை இந்த கப்பல் 2,874 இந்தியர்களை திரும்ப அழைத்துவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.