மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களுடன் தூத்துக்குடி வந்த ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல்

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களை அழைத்துக்கொண்டு இன்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தது. ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மட்டும் இதுவரை மாலத்தீவு மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 2,700 இந்தியர்களை 'சமுத்ரா சேது' ஆபரேஷன் கீழ் திருப்பி அனுப்பியுள்ளது.

By: June 7, 2020, 8:38:59 PM

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களை அழைத்துக்கொண்டு இன்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தது. ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மட்டும் இதுவரை மாலத்தீவு மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 2,700 இந்தியர்களை ‘சமுத்ரா சேது’ ஆபரேஷன் கீழ் திருப்பி அனுப்பியுள்ளது.

ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் இலங்கையின் கொழும்பிலிருந்து தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கு சுமார் 700 இந்தியர்களை ஜூன் 1-ம் தேத் அழைத்து வந்தது. ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல் மாலத்தீவுக்கு மூன்றாவது முறையாக பயணம் செய்தது.

இந்த மீட்பு பணி வந்தே பாரத் மிஷனின் கீழ் செயல்படும் ‘சமுத்ரா சேது’ ஆபரேஷனின் ஒரு பகுதியாகும். இது இதுவரை மே 8 மற்றும் மே 16 ஆகிய தேதிகளில் 2 முறை கிட்டத்தட்ட 2,700 பேரை வெளியேற்றுவதற்கு வசதி செய்துள்ளது.


இந்த நிலையில், ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மாலத்திவில் இருந்து 700 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு இன்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தது. கப்பலில் இருந்து பாதுகாப்பாக இறக்கப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.


இது குறித்து, மும்பை பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் டுவிட்டரில் “ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மாலத்திவில் இருந்து 700 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு இன்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தது. இதுவரை இந்த கப்பல் 2,874 இந்தியர்களை திரும்ப அழைத்துவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ins jalashwa ship brings back 700 indians from maldives to tuticorin harbor

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X