திருக்குறள் முதல் டிஸ்கவரி ஆஃப் இந்தியா வரை… வேதா நிலையத்தில் 8,376 புத்தகங்கள்!

ஜெயலலிதா இறுதியாக படித்த தமிழ் புத்தகம் எது என்று தெரியுமா?

Inside Jayalalithaa’s library: 8,376 books, Tirukkural to Discovery of India

Arun Janardhanan

Inside Jayalalithaa’s library: 8,376 books, Tirukkural to Discovery of India :  மே மாதம் 2012ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, மருத்துவமனையாக மாற்றபப்டும் என்று அறிவித்திருந்தார் ஜெயலலிதா. கருணாநிதியால் கட்டப்பட்ட, இந்தியாவின் மிகப்பெரிய நூலங்களில் ஒன்றான அதனை மாற்ற வாசகர்களும், சிந்தனையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் கூட அந்த திட்டம் கைகூடவில்லை என்பது வேறொரு கதை.

வேதா நிலையத்தில் இருக்கும் உடமைகளை பட்டியலிட்டு வருகிறது தமிழக அரசு. சென்னையின் போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதாவின் இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளான 32,721 பொருட்களில் 8,376 புத்தகங்களும் அடக்கம். திருக்குறள் முதற்கொண்டு ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியாவும், சுயசரிதை புத்தகங்களும், ஜெர்னல்களும் அதில் அடக்கம்.

Inside Jayalalithaa’s library: 8,376 books, Tirukkural to Discovery of India

வேதா நிலையத்தில் இதற்கு முன்பு பணியாற்றியவர்களுக்கும், அவருடைய வீட்டிற்கு செல்ல அனுமதி பெற்றிருந்தவர்களும், ஜெயலலிதா புத்தகங்களை எவ்வளவு சிறப்பாக பாதுகாத்து வந்தார் என்றும், அவருக்கு புத்தகங்கள் மீது எவ்வளவு மதிப்பு இருந்தது என்றும் விளக்குகிறார்கள். வேதா நிலையத்தில் இருக்கும் முதல் மாடியில் வெகு நேரம் அமர்ந்து புத்தகங்கள் படிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார் என்றும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் சீரியல் எண் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டி பாதுகாத்து வந்தார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

ஜெயலலிதாவின் நூலகத்திற்கு சென்ற அதிகாரிகளில் ஒருவர், அங்கிருக்கும் புத்தகங்களில் 75% புத்தகங்கள் ஆங்கில நூல்கள் தான். அங்கிருக்கும் தமிழ் புத்தகங்கள் பலவும் பெரியார் மற்றும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் படைப்புகள். அதைத் தவிர, திருக்குறள் மொழி பெயர்ப்பு, ஆதி சங்கராச்சாரியாவின் புத்தகங்கள், கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தது. மேலும் தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகம் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் புத்தகங்களின் சட்டம் குறித்த சில புத்தகங்களும், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்கள் குறித்து எழுதப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், அகத்தா கிறிஸ்ட்டியின் திகில் நாவல்கள் மற்றும் குஷ்வந்த் சிங்கின் நாவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

அங்கு இருக்கும் நபர்கள் பலரும், ஜெயலலிதா தலைவர்களின் சுயசரிதைகளை விரும்பிப் படிப்பார் என்று கூறியுள்லனர். ஆப்ரஹாம் லிங்கன், ரோனால்ட் ரீகன் ஆகியோரின் சுயசரிதை புத்தகங்களும் அதில் இடம் பெற்றுள்ளது. அந்த புத்தகங்கள் அனைத்திலும் குறிப்புகளை எடுத்துள்ளார் ஜெயா என்றும் அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.

அங்கிருக்கும் புத்தகங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று அலமாரியிலும், மற்றொன்று ரீடிங் கார்னருடன் கூடிய இதழியல் தொகுப்புகள் அடங்கிய பகுதிகளாகும். “இந்த வீடு ஒன்றும் அத்தனை ஆடம்பர்மானதாக இருக்கவில்லை ஒரே ஒரு லிஃப்ட்டை தவிர்த்து. வெகு நாட்களாக ஜெயலலிதா கால்வலியால் அவதியுற்றது அனைவரும் அறிந்தததே. முதல் தளத்தில் ஒரே ஒரு இண்டர்காம் உள்ளது. வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்கள் மற்றும் மற்றவர்களுடன் பேச அது பயன்படுத்தப்பட்டது.

முப்பது வருடங்களாக ஜெவும், வி.கே.சசிகலாவும், சசிகலாவின் மைத்துனி இளவரசியும் அவர்களின் குழந்தைகளும் இங்கு தான் வசித்து வந்தனர். சசிகலாவும், இளவரசியும் தற்போது பெங்களூரு சிறையில் உள்ளனர். ஜெயலலிதாவின் படுக்கை அறை பெரிதாக இருந்தாலும் மிகவும் எளிமையானது. சசிகலாவின் அறை மிகவும் சிறியது. அதில் ஸ்டேஷ்னரி, பெட்டிசனகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜெயலலிதாவின் செக்ரட்டரியாக வெகுநாட்கள் பணியாற்றிய கார்த்திகேயன் இது குறித்து கேட்ட போது, “ஒவ்வொரு புத்தகத்தின் வெளியீட்டையும் அறிந்து, ஒவ்வொரு புத்தகங்களிலும் மூன்று ”காப்பிகளை” வாங்க சொல்வார். சிறுதாவூர் பங்களாவிற்கும், கொடநாடு எஸ்டேட்டிற்க்கும், வேதா நிலையத்திற்கும் என பிரித்து அனுப்பப்படும். அவர் என்னையும் அடிக்கடி படிக்க சொல்லி கூறுவார். ஆனால் நான் படித்ததில்லை” என்று கூறியுள்ளார்.

இளவரசியின் மகள் ஜே. கிருஷ்ணபிரியாவிடம் இது குறித்து கூறிய போது “நான் 10 வயதில் இருக்கும் போது வேதா நிலையம் சென்றேன். என் அப்பா இறந்த பிறகு 1991ம் ஆண்டு நான் அங்கு என் அம்மா இளவரசி, சகோதரர் விவேக் ஜெயராமன் ஆகியோருடன் நான் அங்கு சென்றேன். நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் மேலாக படிப்பார் அவர். ஆங்கில நாவல்களால் நிறைந்திருக்கும் வீடு அது. அவை அனைத்தும் அவர் நடிகையாய் இருந்த காலத்தில் வாங்கப்பட்டவை.

2000ம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதாவின் படிக்கும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது. மருத்துவமனையில் இருக்கும் போது நான் அவருக்கு கடைசியாக படிக்க கொடுத்த புத்தகம் விஷ்ஸஸ் ஃபுல்ஃபில்ட் (Wishes Fullfilled) வெய்ன் டையர் எழுதியது. பெங்களூர் சிறைக்கு சென்ற போது அவர் சி. ராஜகோபாலாச்சாரியாரின் மகாபாரதம் புத்தகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டார். அது தான் அவர் இறுதியாக படித்த தமிழ் புத்தகம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Inside jayalalithaas library 8376 books tirukkural to discovery of india

Next Story
News Highlights: தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆக.15 வரை ரத்துrailway announced
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com