ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஆய்வாளர் கருணாகரன் மீது நடவடிக்கை!

சேலத்தில் ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்த காவல் ஆய்வாளர் கருணாகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்

சேலத்தில் ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்த காவல் ஆய்வாளர் கருணாகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுசீந்திரன். பிரபல ரவுடியான இவர் மீது கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், காவல்துறையினர் துணையோடு பல்வேறு காரியங்களை சுசீந்திரன் சாதித்து வந்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவுடி சுசீந்திரன் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.

அப்போது ரவுடிகளை தனது வீட்டிற்கு அழைத்த காவல் ஆய்வாளர் கருணாகரன், ரவுடிகளுடன் பிறந்த நாள் கொண்டாடியதோடு, சுசீந்தரனுக்கு கேக் வெட்டி ஊட்டி உள்ளார். இதனையடுத்து ரவுடி சுசீந்திரனும், ஆய்வாளர் கருணாகரனுக்கு கேக் ஊட்டி விட்டுள்ளான். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் மாநகர காவல் ஆணையர் சங்கருக்கு தெரியவந்ததையடுத்து, ஆய்வாளர் கருணாகரனை காத்திருப்போர் பட்டியலில் வைத்து உத்தரவிட்டுள்ளார்.

×Close
×Close