Advertisment

இளைஞரை தோளில் தூக்கி காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி: இணையத்தில் குவியும் பாராட்டு

சுற்றி பலர் இளைஞர்கள் இருந்தாலும், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கொஞ்சமும் தாமதிக்காமல் யாரையும் எதிர்பார்க்காமல் உதயாவை தனது தோளில் தூக்கிக் கொண்டு சென்று ஆட்டோவில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

author-image
WebDesk
New Update
Inspector Rajeshwari, Inspector Raeswari, Inspector Rajeshwari rescued a man, viral video, chennai rains, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, இளைஞரை தோளில் தூக்கி சென்று உயிரைக் காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, கீழ்ப்பாக்கம், டிபி சத்திரம், சென்னை மழை, Inspector Rajeshwari, TP Chathiram Inspector Rajeshwari, tamil nadu rains, viral video

சென்னையில் கனமழையால் மரம் முறிந்து விழுந்தபோது படுகாயம் அடைந்து சுயநினைவின்றி உயிருக்கு போராடிய இளைஞரை பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தனது தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

சென்னையில் ஒரு வாரமாக தொடர் கன மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. தமிழக அரசு வெள்ள நீரை வெளியேற்றி மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு வருகிறது. கனமழையால், சென்னையில் சாலைகளில் பல்வேறு இடங்களில் முறிந்து விழுந்த மரங்களை மீட்புக் குழுவினர் விரைவாக அகற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து மழையில் நனைந்ததால் இளைஞர் ஒருவர் சுயநினைவிழந்து கிடந்ததால் உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட நிலையில், அந்த நபர் உயிருடன் இருப்பதை கண்டறிந்த டி.பி.சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அந்த இளைஞரை தனது தோளில் தூக்கிக்கொண்டு ஓடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியுள்ளார். தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்ததால் மயங்கி விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

இதைப்பார்த்த, அப்பகுதி மக்கள் அவர் இறந்து கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு விரைந்து வந்து பார்த்த போது அவர் உயிருடன் இருப்பதை அறிந்து, சுற்றி பலர் இளைஞர்கள் இருந்தாலும், கொஞ்சமும் தாமதிக்காமல் யாரையும் எதிர்பார்க்காமல் உதயாவை தனது தோளில் தூக்கிக் கொண்டு சென்று ஆட்டோவில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மருத்துமனையில், உதயாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டி.பி. சத்திரம் காவல் நிலையம், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். சுயநினைவில்லாமல் இருந்த இளைஞரை மிகவும் சாதாரணமாக தோளில் தூக்கிச்சென்று ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்கும் ராஜேஸ்வரியை சிங்கப்பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி என்று சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் இந்த துரித நடவடிக்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு மக்களிடையே காவல்துறை மீது மரியாதையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மழையில் நனைந்து விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தோளில் தூக்கிக்கொண்டு ஓடிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இன்பெக்டர் ராஜேஸ்வரி துரிதமாக செயல்பட்டு சுயநினைவின்றி கிடந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்போது அந்நபர் உயிர் பிழைத்துள்ளார். ராஜேஸ்வரி சிறந்த அதிகாரி, எல்லா பாராட்டுகளுக்கும் உரித்தானவர் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment