Advertisment

ஓசி தேநீர், பிரெட் ஆம்லேட் கூடவே கமர்கெட்: கையும் களவுமாக சிக்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!

கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Inspector Vijayalakshmi was suspended after buying items from the shop and leaving without paying

இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி

தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் இருப்பவர் விஜயலட்சுமி. இவர், கடைகளில் தேநீர், பிரெட் ஆம்லேட், கமர்கெட் என வாங்கி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்று விடுவார் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில், சம்பவத்தன்று கடை ஒன்றில் ஓசி கமர்கெட் வாங்கி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்றுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

Advertisment

தொடர்ந்து, கடையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் சோதிக்கப்பட்டன. அதில் பெண் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, ஏட்டு ஜெயமாலா, இரண்டு ஆயுதப்படை போலீஸார் என நான்கு பேர் காசு கொடுக்காமல் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உட்பட நான்கு பேரையும் சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். சம்பவத்தன்று கடையில் வடமாநில தொழிலாளி ஒருவர் பணியில் இருந்துள்ளார்.

அவருக்கு தமிழ் சரியாக தெரியாத நிலையில் காசு கொடுக்காமல் சென்றுள்ளனர். அப்போது அவர் காசு கேட்டதற்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.

ஏற்கனவே, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி இரண்டாவது திருமணம், மாமூல் உள்ளிட்ட குற்றாச்சாட்டுகளுக்காக துறைரீதியான விசாரணைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Police Tambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment