ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி (27) நேற்று இரவு மனைவி தேவிகாஸ்ரீ என்பவரை பார்ப்பதற்காக கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அதிகவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது கட்டுப்பாடை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் நடுவே உள்ள செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் போராடிய ராகுல் மீட்டு மக்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்த ராகுலின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இன்ஸ்டா பிரபலம் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றதால் உயிரிழந்தது தெரியவந்தள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலமான ராகுலை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்,
இவர் இன்ஸ்டாவில் நகைச்சுவையாகவும் வேடங்கள் போட்டு வெளியிடும் வீடியோக்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுடன் கலகலப்பான அவரது பேச்சு பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகுலுக்கு திருமணமான நிலையில் பொங்கல் பண்டிகைக்காக தனது அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை அழைத்து வர இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.