ஒரே விபத்திற்கு மூன்று முறை இன்சூரன்ஸ் விண்ணப்பம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

ஒரே விபத்திற்கு மூன்று முறை இன்சூரன்ஸ் விண்ணப்பம்

ஒரே விபத்திற்கு மூன்று முறை இன்சூரன்ஸ் விண்ணப்பம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஒரே விபத்திற்கு மூன்று முறை இன்சூரன்ஸ் விண்ணப்பம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

ஒரே விபத்தை காரணம் காட்டி மூன்று முறை இன்சூரன்ஸ் பணத்திற்காக விண்ணப்பித்து மோசடி செய்தது தொடர்பாக விசாரனை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரூவை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Advertisment

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வண்டலூர்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற மோகன் என்பவர் பலியானார்.

விபத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து 42 லட்சம், 35 லட்சம் மற்றும் 50லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, லாரி இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ள சோழமண்டலம் எம்.எஸ் ஜெனரல் நிறுவனத்துக்கு, சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திலிருந்து இரண்டு சம்மன்களும், திருவள்ளூர் நீதிமன்றத்திலிருந்து ஒரு சம்மனும் வந்துள்ளது.

Advertisment
Advertisements

ஒரு விபத்து தொடர்பாக போலியான முதல் தகவல் அறிக்கை தயாரித்து சட்டவிரோதமாக தங்கள் நிறுவனத்திடம் பணம் பறிக்க முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சோழமண்டலம் எம்.எஸ் ஜெனரல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே சிபிசிஐடி கண்காணிப்பாளர் பிரவீன் குமார் மற்றும் சோமங்களம் காவல் ஆய்வாளர் ஆகியோர் நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர்.

விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் லாரி, சம்பவத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே வேறொரு விபத்தில் சிக்கியதால் சம்பவத்தன்று வாகனம் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், விபத்து தொடர்பாக போலியான முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரூவை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த மோசடிக்கு துணை போன வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: