தற்போதைய இளைய தலைமுறையினர் மெதுவாக சாதிய முறையிலிருந்து வெளிவந்துகொண்டிருப்பதால் கலப்பு திருமணங்கள் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாமக்கல் பகுதியைச்சேர்ந்த நிவேதிதா, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி ஆகியோர் காதல் திருமணம் செய்துகொண்டனர்.இந்த திருமணமத்திற்கு நிவேதிதா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெற்றோர்களிடமிருந்து மிரட்டல் வருவதாகவும் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரார்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்களது வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர்களை குடும்பத்தினரோ உறவினர்களோ துன்பறுத்தவோ மிரட்டவோ முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கலப்பு திருமணம் மட்டுமே சாதி துவேசத்தை ஒழிக்கும் நிவாரணியாக பல சிந்தனையாளர்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைய இளையதலைமுறையினர் மெதுவாக சாதிய முறையிலிருந்து வெளிவந்து கொண்டிருப்பதால் கலப்பு திருமணங்கள் அதிகரித்திருப்பதாக வும் இந்த மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் மேலும் இது சமுதாயத்திற்கு நல்லது என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். மேலும் கலப்பு திருமணம் செய்துகொண்ட மனுதாரர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க :நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்