வீட்டை எதிர்த்து சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட இளம் ஜோடி, ரயில் முன்பு பாய்ந்து உயிரிழந்திருப்பது ஆம்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நந்தினி தனது 18 வயதில் தனது தொலைதூர உறவினரை மணந்துக் கொண்டார். ஆனால் திருமணமான மூன்று மாதங்களுக்குள் கணவனை விட்டு பிரிந்தார். இருப்பினும், அவர்கள் விவாகரத்து செய்துக் கொள்ளவில்லை. நந்தினி இப்போது கோவையில் உள்ள ஒரு தனியார் ஜவுளி உற்பத்தி பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
நீடிக்கும் பள்ளித் தேர்வுகள் குழப்பம்: தெளிவுப் படுத்துமா பள்ளிக் கல்வித்துறை?
இந்நிலையில் பெங்களூரில் பணிபுரிந்து வந்த ராமதாஸ், ஆறு மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகத்தின் மூலம் நந்தினிக்கு அறிமுகமானார். நட்பாக தொடங்கிய இவர்களது சந்திப்பு காதலில் முடிந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருப்பினும் இருவரது சமூகத்தை முன் வைத்து, பெற்றோர்கள் அந்தத் திருமணத்துக்கு தடையாக இருந்தனர். அதோடு நந்தினிக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்ததும், பெற்றோர்கள் எதிர்ப்புக்கு இன்னும் வலு சேர்த்தது.
சில நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, தலைமறைவாகினர். அம்பூரில் உள்ள வீரவர் கோயிலில் வைத்து, நந்தினியை திருமணம் செய்து கொண்டதாகவும், இனி வீடு திரும்ப மாட்டேன் என்றும் ராமதாஸ் தனது பெற்றோருக்கு வியாழக்கிழமை மாலை தகவல் தெரிவித்துள்ளார்.
நீடிக்கும் பள்ளித் தேர்வுகள் குழப்பம்: தெளிவுப் படுத்துமா பள்ளிக் கல்வித்துறை?
இந்நிலையில், ராமதாஸ் மற்றும் நந்தினியின் சிதைந்த உடல்கள் ரயில்வே பாதையில் வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, அவர்கள் ரயில்வே ட்ராக்கில் செல்ஃபி எடுத்துக் கொண்டதாக, ஆம்பூர் டி.எஸ்.பி, சி.கே.சச்சிதானந்தம் தெரிவித்தார். சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் ரயில் அவர்கள் மீது ஓடியிருக்கிறது. இதனையடுத்து, சிஆர்பிசி-யின் பிரிவு 174 (இயற்கைக்கு மாறான மரணம்) கீழ் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"