பொள்ளாச்சியில் 8-வது சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக 8-வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது.இன்று முதல் இந்த திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக 8-வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது.இன்று முதல் இந்த திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
Advertisment
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக இந்த பலூன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் முதல் பலூன்திருவிழா என சுற்றுலாத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ்,ஜெர்மன், நெதர்லேண்ட் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து பத்து வகையான பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது.இதை பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கலந்து கொண்டனர்.
மூன்று நாட்களும் காலை மாலை என இரு வேலைகளிலும் பலூன் வானில் பறக்க விடப்படுகிறது. இந்த பலூனில் பரப்பதற்காக ஒரு நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த பலூன் திருவிழா முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"