உலக முதியோர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு சார்பில் முதியவர்களை கௌரவப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த வகையில் நீலகிரி மாவட்டம், கூடலூரில் உலக முதியோர் தினவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா முதியோர் இல்லம் ஒன்றில் நேற்று (அக்.10) நடைபெற்றது.
இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டு முதியவர்களை கௌரவப்படுத்தினார். 100 வயது கடந்த முதியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
விழாவில் முதியவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குழுவாக நடனமாடினர். 'ஆயிரம் உறவு உன்ன தேடி நின்னாலும் தாய்போலே தாங்க முடியுமா' எனப் பாடலுக்கு நடனமாடினர். இதைக் கண்டு ஆட்சியர் அருணா உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தினார். இது அங்கிருந்தவர்களையும் கண்கலங்கச் செய்தது.
தொடர்ந்து அருணா முதியோர்களுடன் அமர்ந்து உணவருந்தி, அவர்களுக்குப் பரிசு பொருட்களை வழங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“