சர்வதேச பெண்கள் தினம் : நல்ல உடல்நலத்துடன் கொண்டாட அழைக்கிறது சென்னை மெட்ரோ..
Chennai metro : சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், மார்ச் 8ம் தேதி, சர்வதேச பெண்கள் தினத்தை, மெட்ரோ ஸ்டேசன்களில் மருத்துவ முகாம்களை வித்தியாசமான முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், மார்ச் 8ம் தேதி, சர்வதேச பெண்கள் தினத்தை, மெட்ரோ ஸ்டேசன்களில் மருத்துவ முகாம்களை வித்தியாசமான முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
Advertisment
சென்னை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உற்ற நேரத்தில் உதவிபுரியும் வகையில் மெட்ரோ ரயில் சேவை விளங்கி வருகிறது. நாள்தோறும் 1 லட்சம் மக்கள், இந்த மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும், மக்களுக்கு உறுதுணை புரியும் வகையில் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன்மூலம், போக்குவரத்து பயன்பாட்டிற்கு மெட்ரோ ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சர்வதேச பெண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடும் பொருட்டு, சென்னை மெட்ரோ, பொதுமக்களுக்காக இலவச மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
வடபழனி, ஷெனாய் நகர், விமானநிலையம், ஆலந்தூர், அசோக் நகர் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ ஸ்டேசன்களில் இந்த இலவச மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் பின் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் நடைபெற உள்ளன.
இந்த மருத்துவ முகாமில், உயரம், எடை, ரத்த அழுத்தம் , ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்படுவதுடன், இலவச மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.
மெட்ரோ ரயில் பயணிகள் மட்டுமல்லாது, பொதுமக்களும் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil