சர்வதேச யோகா போட்டியில் திருமணமான பெண்கள் உட்பட கோவையை சேர்ந்த 14 பேர் சாதனை படைத்ததையடுத்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளனர்.
திருமணமான பெண்கள் உட்பட இதில் கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற்றி கவனத்தை ஈர்த்துள்ளனர்.
தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட யோகா போட்டியாளர்களுக்கு சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது.
கடந்த 15ம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, ஸ்ரீலங்கா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் ஐந்து வயது முதல் ஐம்பது வயதிற்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்ட இதில், ஆர்ட்டிஸ்டிக்,ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
மயூர் ஆசனம், திருவிக்கிரமா ஆசனம், சிரசாசனம், சக்ராசனம் என பல்வேறு ஆசனங்கள் கொண்டு யோகா போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் கோவையை சேர்ந்த பிராணா யோகா மையத்தின் ஜெயலட்சுமி மோகன்ராஜ் ஆகியோர் நடுவர்களாக பங்கு பெற்றனர்.
இது குறித்து யோகா பயிற்சியாளர் ஜெயலட்சுமி கூறியதாவது.
தற்போது உடல் ஆரோக்கியம் மன அழுத்தத்தில் இருந்து விடுபட என பலர் எங்களது யோகா மையத்திற்கு வருவதாகவும்,ஆனால் இது போன்று வருபவர்கள் தேசிய, சர்வதேச போட்டிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொள்வதாகவும்
மேலும் இது போன்று போட்டிகளில் கலந்து கொண்டு வெல்வதால் யோகா குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதாக இவ்வாறு தெரிவித்தார்.
பிராணா யோகா மையத்தில் பயற்சி பெற்று பதக்கம் வென்ற பலரும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி திருமணமான பெண்களும் இருப்பது குறிப்பிடதக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“