/tamil-ie/media/media_files/uploads/2019/06/sachin-37.jpg)
international yoga day celebration
international yoga day celebration : நாடு முழுவதும் சர்வதேச யோக தின கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளனர். நாடு முழவதும் பல்வேறு இடங்களில் யோகா திப்னத்தை ஓட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றனர்.
அரசு அங்கீகாரம் பெற்றா யோகா நிறுவனங்கள், யோகா பயிற்சி வகுப்புகள், தனியார் யோகா ஆசிரியர்கள் ஆகியோ இணைந்து யோகா தினத்தை முன்னிட்டு யோகா குறித்த விழிப்புணர்வுகளை மக்களிடையே பரப்பி வருகின்றனர். அந்த வகையில் சென்னை வேலம்மாள் பள்ளி நிர்வாகம் மாணவர்களுடன் சேர்ந்து புதியதொரு முயற்சியில் இறங்கியது.
தற்போது நடைப்பெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், யோகா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும் மாணவர்கள் அனைவரும் உலக கோப்பை வடிவில் யோகா பயிற்சி செய்து அசத்தியுள்ளனர்.
மாணவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் அமர்ந்துக் கொண்டு யோக முத்திரை ஆசனத்தை செய்தனர். இந்த காட்சிகள் மேலிருந்தும் பார்க்கும் போது அப்படியே உலக கோப்பை வடிவில் தெரிந்தது. இதோ அந்த அழகிய காட்சிகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.