காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்: பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

உண்மைக்கு புறம்பான கருத்தை உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தெரிவிப்பது மூலம் காவிரி பிரச்சனையை ஆணையத் தலைவர் முழுமையாக உணரவில்லையோ? என்று எண்ணத் தோன்றுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

உண்மைக்கு புறம்பான கருத்தை உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தெரிவிப்பது மூலம் காவிரி பிரச்சனையை ஆணையத் தலைவர் முழுமையாக உணரவில்லையோ? என்று எண்ணத் தோன்றுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Interviewed by PR Pandian in Chennai after meeting Shankar Jiwal

தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ்-ஐ அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் காவல்துறை விவசாயின் பிரச்னைக்கு சுமூக முடிவு எடுப்பதற்கு தொடர்ந்து முயற்சிப்பது பாராட்டுக்குறியது.
பிரச்னைகளை தீர்வுகாண எடுக்கும் காவல்துறையின் முயற்சிக்கு அரசுத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில் பின்னடைவு உள்ளது.

பல்வேறு இடங்களில் போராட்ட களத்தில் காவல்துறை விவசாயிகளின் பிரச்னைகளை கணக்கில் கொண்டு தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையிலேயே அணுகுமுறை கையாள்வதற்கு நன்றி தெரிவித்தோம்.

மன்னார்குடியில் முதன் முதலாக ஏஎஸ்பியாக காவல் பணியை தொடங்கிய சங்கர் ஜிவால் இன்று காவல்துறை தமிழக தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

Advertisment
Advertisements

காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் உறவை உருவாக்குவதற்கு வழிகாட்டும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கொடுத்துள்ள பதில் மனுவில் தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு பருவமழை மட்டுமின்றி வடகிழக்கு பருவமழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளதால், கர்நாடகாவில்
குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் திறக்க இயலாது என்ற அடிப்படையில் கருத்தை தெரிவித்து இருப்பது உண்மைக்கு புறம்பானது.

வடகிழக்கு பருவமழையால் தண்ணீரை தேக்கி சாகுபடியை பாதுகாக்க முடியாது. இது குறித்து ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு எடுத்துரைப்பதோடு, உச்ச நீதிமன்றத்திலும் எடுத்துரைக்க வேண்டும்.
தவறான வகையில் உண்மைக்கு புறம்பான கருத்தை உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தெரிவிப்பது மூலம் காவிரி பிரச்சனையை ஆணையத் தலைவர் முழுமையாக உணரவில்லையோ? என்று எண்ணத் தோன்றுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

விவசாயிகளின் விளை நிலங்களையும், ஏரி குளம் உள்ளிட்ட நீர் ஆதாரங்களையும், ஆறு வாய்க்கால் உள்ளிட்ட நீர் வழிபாதைகளை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவாக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023க்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது.
இதனைத் திரும்ப பெற வலியுறுத்தி வருகிறோம். அதனை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை ரத்து செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடர உள்ளோம்.

தமிழ்நாட்டின் புகழ்மிக்க வழக்கறிஞர்கள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் வழக்கு தொடர்வோம் என்றார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, சென்னை மண்டல தலைவர் சைதை சிவா உடன் இருந்தார்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: