Advertisment

விழாக்களில் மீதமாகும் உணவு... ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு கொண்டு சேர்க்க இலவச வேன் அறிமுகம்

திருச்சியில் இல்லங்கள் மற்றும் விழாக்களின் போது மீதமாகும் உணவுகளை சேகரித்து ஆதரவற்றோர் காப்பகங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் கொடுக்க நடமாடும் வாகனச் சேவையை திருச்சி காவலா் பயிற்சிப்பள்ளி காவலர் ஒருவா் தொடங்கியிருக்கின்றார்.

author-image
WebDesk
New Update
Trichy van free

விழாக்களில் மீதமாகும் உணவு... ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு கொண்டு சேர்க்க இலவச வேன் அறிமுகம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சியில் இல்லங்கள் மற்றும் விழாக்களின் போது மீதமாகும் உணவுகளை சேகரித்து ஆதரவற்றோர் காப்பகங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் கொடுக்க நடமாடும் வாகனச் சேவையை திருச்சி காவலா் பயிற்சிப்பள்ளி காவலர் ஒருவா் தொடங்கியிருக்கின்றார். இதுகுறித்த விபரம் வருமாறு;

   

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மண்டபங்களில் நடக்கும் திருமணம், இல்லங்களில் நடக்கும் பிறந்தநாள், காதணி மற்றும் தனியார் அமைப்புகள் நடத்தும் விழாக்களில், தனியார் விடுதி விருந்துகளில் பயன்பாட்டுக்கு மீறிய உணவை என்ன செய்வதெனத் தெரியாமல் குப்பைகளில் கொட்டிவிடுகின்றனா். இதனால் சுகாதார சீர்கேடும் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அதேநேரம், இந்த பயன்பாட்டுக்குப் பிறகு மீதமிருக்கும் உணவை ஆதரவற்றோர், முதியோர் காப்பகங்களில் அதைக் கொடுக்க வேண்டுமென்றால் ஆட்டோ, வேன்களுக்கான பலர் தடுமாறுவதையும் கண்கூடாக பார்க்க முடிகின்றது. 

   

இதுபோன்ற நிலையை கருத்தில் கொண்டு, திருச்சி நவல்பட்டு காவலா் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த காவலா் அரவிந்தன் என்பவா் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதற்கென பிரத்யேக வாகனம் ஒன்றை (ஆம்னி வேன்) தனது நான்கு ஆண்டு சேமிப்பு ரூ.1 லட்சத்தில் வாங்கியுள்ளார். இதன் மூலம் திருச்சி மாநகா் மற்றும் புறநகர் பகுதி விழாக்களில் மீதமாகும் உணவுகளை சேகரித்து, திருச்சியில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொண்டு செல்ல வேனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் அறிவித்தார்.

   

இந்த வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சியினை மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி.நீலமேகம், ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி. கோவிந்தசாமி, கோ.ஜீவா ஆகியோர் தொடங்கி வைத்தனா். மாக்மாஸ் டிரஸ்ட் சார்பில் நடந்த இந்த விழாவில் விழா நிகழ்ச்சிகளில் பயன்பாட்டுக்கு பிறகு மீதமான உணவை சேகரித்து கிராப்பட்டியில் உள்ள கங்காரு கருணை இல்லத்துக்கு அனுப்பினா். 

    

விழாக்களில் உணவு மீதமானால் கீழ்க்கண்ட அலைபேசி 83009-02015, 99622-55282 ஆய எண்களுக்கு தகவல் தெரிவித்தால் போதும், அந்த வேன் மூலம் மீதமான உணவுகளை ஆதரவற்றோர் மற்றும் காப்பகங்களில் சோக்க இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

   

இதுகுறித்து அரவிந்தன் கூறியதாவது; நான் 2011 ஆம் ஆண்டு முதல் ரத்த தானம் வழங்கல், இலவசமாக மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக்கொடுப்பது என பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் செய்துக்கொண்டிருக்கின்றேன். 

   

அதேநேரம் திருச்சி மாவட்டத்தில் உள்ள காப்பகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு  என்னால் இயன்றதையும், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகின்றேன். எனது 4 ஆண்டு சேமிப்புப் பணம் மூலம் தற்போது ஒரு மாருதி வேனை வாங்கியிருக்கின்றேன். இதில் மாவட்டத்தில், அண்டை மாவட்டத்தில் என விழாக்களில் பயன்பாட்டுக்கு மீறிய உணவினை பசித்தோருக்கு பகிர்ந்தளிக்கும் முயற்சியைத் செயல்படுத்தியுள்ளேன். 

  

எனது வேலை நேரம் போக மற்ற நேரங்களில் வாகனத்தை நானே இயக்குவேன். வேலையிலிருந்தால் எனது நண்பா்கள் மூலம் இச்சேவையை வழங்க ஏற்பாடு செய்துள்ளேன் என்றார் அரவிந்த்.

Advertisment

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment