திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட குடியிருப்பு பகுதிகள் கண்காணிப்பு சேவைகள் வழங்க பிரத்யேக ஏற்பாடாக QR code அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது;
திருச்சி மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் மேம்படுத்தும் நோக்கிலும் , மாநகராட்சி தொடர்பான புகார்களை உடனுக்குடன் களையவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை மூலம் நகரில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு QR code மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதனால் மாநகராட்சி அலுவலர்களை கொண்டு வார்டு தோறும் உள்ள வீடுகள் அதிலுள்ள குடியிருப்போர் பற்றி விவரங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அவர்களின் மாநகராட்சி தொடர்பான புள்ளி விவரங்களை கணக்கெடுத்து QR code ஸ்டிக்கர்களை ஒட்டிட ஏற்பாடு செய்யப்பட்டு வார்டு 22 - இல் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இப்பணிக்கு அடையாள அட்டையுடன் வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு பொதுமக்களை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/