கோவை மாணவி லோகேஸ்வரி துயர மரணம்: விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு

லோகேஸ்வரி மரணம்.. விசாரணை: கோவை மாணவி லோகேஸ்வரி மரணம், ஈடு செய்ய முடியாதது. இனி இது போன்று நிகழாத வகையில் விசாரணையும் நடவடிக்கையும் இருக்க...

லோகேஸ்வரி, கோவை மாணவி துயர மரணம்: தமிழ்நாட்டை அதிர வைத்திருக்கும் கோவை மாணவி லோகேஸ்வரி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என  அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

லோகேஸ்வரி … கோவை அருகே நரசீபுரம் பகுதியில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவி! நேற்று அங்கு தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியின்போது மாணவி லோகேஸ்வரியை கீழே குதிக்கும்படி பயிற்சியாளர் ஆறுமுகம் வற்புறுத்தினார்.

லோகேஸ்வரி, கோவை கல்லூரி மாணவி, Lokeshwari, Coiambatore College Girl

லோகேஸ்வரி … கோவை கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் பலியான மாணவி

லோகேஸ்வரியின் மறுப்பையும் மீறி 2வது பாடியில் இருந்து லோகேஸ்வரியை கீழே தள்ளினார் பயிற்சியாளர். இதனால் சன் ஷேடில் பலமாகக் காயப்பட்டு மாணவி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, பேரிடர் மீட்பு பயிற்சியின்போது மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

லோகேஸ்வரி மரணம் குறித்து அமைச்சர் பேட்டி

லோகேஸ்வரி மரணம் குறித்து தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியபோது, கல்லூரி மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் உரியப் பாதுகாப்புடன் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

லோகேஸ்வரி: பேரிடர் மீட்பு பயிற்சியில் அநியாயமாக கொல்லப்பட்ட கோவை மாணவி! To Read, Click Here

மாணவியின் மரணத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பயிற்சியாளர் ஆறுமுகம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பயிற்சியில் நடந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லோகேஸ்வரி மரணம், அரசு மற்றும் கல்வித்துறை நிர்வாகங்களுக்கு ஒரு பாடமாகவேண்டும். உரிய வழிகாட்டுதல் அல்லது சரியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் இப்படி உயிருடன் விளையாடக்கூடாது.

×Close
×Close