INX Media case tamil news: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் பிற குற்றவாளிகளின் ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ ‘மல்கானா’வில் உள்ள வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதி அளித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தள்ளுபடி செய்தார்.

ஆய்வை எதிர்த்த சிபிஐ, விசாரணையில் அந்த ஆவணங்களை நம்பவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நம்பத்தகுந்த பாதுகாப்பைத் தேட நீதிமன்றம் உதவ முடியாது என்றும் வாதிட்டது.
கடந்த மார்ச் 5 அன்று விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சிபிஐயால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டால் முடிவு எட்டப்படும் என்று கூறியது. மேலும், “அத்தகைய ஆவணங்களில் ஏதேனும் பொருத்தமானதா அல்லது அவர்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது அல்லது வழக்குத் தொடரும் வழக்கையே தகர்க்கும் தரம் வாய்ந்தது”என்றும் தெரிவித்து இருந்தது.

கடந்த 2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“