சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு : செல்போன், கார் சாவி, பேனர்களுக்கு அனுமதி இல்லை

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியின்போது செல்போன், பதாகைகள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியின்போது செல்போன், பதாகைகள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இங்கு ஏப்ரல் 10-ம் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டம் வலுத்து வரும் நிலையில் இங்கு போட்டிகளை நடத்தக் கூடாது என சில அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

சேப்பாக்கம் மைதானத்தை போட்டி நடைபெறும்போது முற்றுகையிடுவோம் என்றும், ரசிகர்கள் போல டிக்கெட் எடுத்து மைதானத்திற்குள் சென்று எதிர்ப்பை காட்டுவோம் என்றும் சில அமைப்புகள் கூறியிருக்கின்றன. எனினும் பலத்த பாதுகாப்புடன் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துவிட்டது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பல கட்டுப்பாடுகளை விதித்து இன்று (ஏப்ரல் 9) சேப்பாக்கம் மைதான பொறுப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டனர். அதன்படி, ‘சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு நாளை நடைபெறும் போட்டியின்போது செல்போன், கார் சாவிகள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது.

பேனர்கள், கொடிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மைதானத்திற்குள் பொருட்களை வீசுபவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர். மைதானத்திற்குள் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது’ உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மைதானத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்புக்கு போலீஸ் ஏற்பாடு செய்திருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close