செவ்வாய்க்கிழமை நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட்டுகளை, சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானம் அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்த 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அசல் விலையை விட அதிகமான விலையில் டிக்கெட்டுகளை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 2 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள 83 டிக்கெட்டுகள், ரூ. 18,000 ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
ஐபிஎல் டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க கடுமையான கண்காணிப்புக்கு உத்தரவிட்ட போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு மற்றும் சேப்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள மூலோபாய இடங்களில் உன்னிப்பாகக் கண்காணிப்பை மேற்கொண்டதாக போலீஸ் குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சில கல்லூரி மாணவர்களும் அடங்குவர்.பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“