scorecardresearch

சென்னையில் ஐ.பி.எல்: பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

சென்னையில் ஐ.பி.எல் நடைபெறும் நாட்களில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Traffic
Chennai Traffic Diversion

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் 7 நாட்கள் சென்னையில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, சென்னை உள்பட பல்வேறு ஊர் மைதானங்களில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுகிறது. சென்னையில் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுகிறது.

இதையொட்டி சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறும் நாட்களில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று ஏப்ரல் 3,6,12, 21, 30 மற்றும் மே 10, 14 ஆகிய 7 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் 3, 12, 21, மே 10, 14 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையும், வருகிற 30 மற்றும் மே 6-ம் தேதி மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

  1. விக்டோரியா ஹாஸ்டல் ரோடு (கெனால்ரோடு) சாலைக்கு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
  2. பெல்ஸ்சாலை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு, பாரதி சாலை- பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை- பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ்சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
  3. பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் பாரதி சாலை – பெல்ஸ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் சாலை வழியாக வாலாஜாசாலை சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம். பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.
  4. அண்ணா சாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜாசாலை வரும் எம்.பி.டி.டபிள்யூ. ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ipl carnival in chennai traffic restrictions announced on several roads on match days details