2018 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் கமிட்டியின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் காவல்துறை இயக்குநராக (டிஜிபி) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சிலைப் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநராக (ஏடிஜிபி) பணியாற்றிய ஷைலேஷ் குமார் யாதவ், இப்போது தலைவராக உயர்வு பெற்றுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, தென் மண்டல காவல் கண்காணிப்பாளராக (ஐஜிபி) ஷைலேஷ் பணியாற்றி வந்தார்.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்; வன்முறையில் சுமார் 100 பேர் காயமடைந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்த சில வாரங்களில் சென்னைக்கு மாற்றப்பட்டு ஆயுதப்படை ஐஜிபியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஷைலேஷ் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“