scorecardresearch

விழுப்புரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்: அமுதா ஐ.ஏ.எஸ் உத்தரவு

தமிழ்நாடில் ஐ.பி,எஸ் அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ளார்.

அமுதா ஐ.ஏ.எஸ் உத்தரவு
அமுதா ஐ.ஏ.எஸ் உத்தரவு

தமிழ்நாடில் ஐ.பி,எஸ் அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை உள்துறை  செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம்  மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாரயம் குடித்து இதுவரை  13 பேர் உயிழந்துள்ளனர்.  இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கவும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா  50 ஆயிரம்  நிவாரணமாக வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதுபோல விழுப்புரம்,  செங்கல்பட்டு மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புறம் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக குற்றப்பிரிவு சிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ் பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்.பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல கள்ளக்குறிச்சி எஸ்.பி மோகன்ராஜுக்கு விழுப்புரம் எஸ்.பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ips officers changed amutha ias order in 3 districts