Advertisment

நள்ளிரவில் உத்தரவு: தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நள்ளிரவில் உத்தரவு: தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

ips officers transferred : தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நேற்று இரவு (30.6.20) இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்தார்.

Advertisment

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டு,மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.இவருடன் தமிழகத்தில் மொத்தம் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் குறித்து முழு விபரம் இதோ.

ips officers transferred list

1. சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டார்.

2. செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

3. சீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி சுனில்குமார் மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக மாற்றப்பட்டார்.

4. மதுரை காவல் ஆணையராக பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டார்.

5. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி சிறப்பு காவற்படை ஈரோடு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

6. தலைமையிட ஐஜி ஜெயராம் மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

7. மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

8. சென்னை ஐஜி கணேசமூர்த்தி பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

9. சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் -சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

10. சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா மதுரை காவல் ஆணையராக மாற்றப்பட்டார் .(ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்து ஐஜி அந்தஸ்துக்கு மீண்டும் குறைக்கப்பட்டுள்ளார்)

11. சென்னை போக்குவரத்து கூடுதல்ஆணையர் அருண் -சென்னை சட்டம் ஒழுக்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

12. திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய்குமார் சென்னை தொழில் நுட்பப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

13. தஞ்சை டிஐஜிபியாக பதவி வகிக்கும் லோகநாதன் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

14. சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமர் சி சரத்கர் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சிபிசிஐடி ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

15. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜி கண்ணன் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

16. விழுப்புரம் டிஐஜியாக பதவி வகிக்கும் சந்தோஷ்குமார் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை காவல் ஆணையரக நிர்வாக ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

17. காஞ்சிபுரம் டிஐஜி தேன்மொழி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

18. கோவை டிஐஜி கார்த்திகேயன் ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருப்பூர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

19. திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

20. கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி புவனேஷ்வரி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை ஐஜி (பொது) நியமிக்கப்பட்டார்.

21. திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டார்.

22. சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக மாற்றப்பட்டார்.

23. சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையர் ஏ.ஜி.பாபு சென்னை தெற்குமண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டார்.

24. சென்னை தெற்குமண்டல இணை ஆணையராக உள்ள மகேஷ்வரி சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையராக மாற்றப்பட்டார்.

25. சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையர் எழிலரசன் விழுப்புரம் டிஐஜியாக மாற்றப்பட்டார்.

26. சென்னை ஆயுதப்படை டிஐஜி செந்தில்குமாரி சென்னை தலைமையிட டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.

27. மதுரை டிஐஜி ஆன்னி விஜயா திருச்சி டிஐஜியாக மாற்றப்பட்டார்.

28. சென்னை டிஐஜி (நிர்வாகம்) நரேந்திரன் நாயர் கோவை டிஐஜியாக மாற்றப்பட்டார்.

29. ராமநாதபுரம் டிஐஜி ரூபேஷ்குமார் மீனா தஞ்சை டிஐஜியாக மாற்றப்பட்டார்.

30. அயல்பணியில் இருக்கும் அபிஷேக் திக்‌ஷித் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று டிஐஜியாக தொடர்கிறார்.

31. சிபிசிஐடி குற்றப்பிரிவு-2 எஸ்பியாக இருக்கும் மல்லிகா டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி குற்றப்பிரிவில் நியமிக்கப்பட்டார்.

32. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சாமூண்டீஸ்வரி டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.

33. சமுதாய நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக இருக்கும் லட்சுமி சென்னை (தெற்கு)போக்குவரத்து பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

34. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பியாக இருக்கும் ராஜேஷ்வரி டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை ஆயுதப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டார்

35. சீருடைப்பணியாளர் தேர்வாணைய எஸ்பி பாண்டியன் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை ரயில்வே டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.

36. பூக்கடை துணை ஆணையர் ராஜேந்திரன் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.

37. அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு திண்டுக்கல் டிஐஜியாக நியமிக்கப்பட்டார்

38. சென்னை போக்குவரத்து (தெற்கு) துணை ஆணையர் மயில்வாகனன் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு ராமநாதபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.

39. சென்னை செக்யூரிட்டி பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் விழுப்புரம் எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment