தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர், நான்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு எஸ்.பி-ஐ பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஜி.பி-யாக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜியாக எஸ்.மல்லிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐ.ஜியாக அபிஷேக் தீக்ஷித்தை நியமனம் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ரயில்வே காவல்துறை டி.ஜி.பி-யாக வன்னியபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பியாக முத்தமிழ் நியமிக்கப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“