ஈரோடுக்கு ஒரு டிக்கெட் பார்சல்... சைவ, அசைவ உணவுகளுடன் ரெடியாக காத்திருக்கும் ரயில் நிலையம்!

இந்த உணவங்களில் இரண்டு தனித்தனி சாப்பாட்டு அறைகள் மற்றும் இரண்டு பார்சல் கவுண்டர்களும் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது.

IRCTC Erode railway station serves hot tasty veg non veg foods : உங்கள் சுவை மொட்டுகளை திருப்தியடைய செய்ய ஐஆர்சிடிசி உலகத்தரம் வாய்ந்த சைவம் மற்றும் அசைவ சமையல் கூடம் மற்றும் உணவகத்தை ஈரோடு ரயில் நிலையத்தில் திறந்துள்ளது.

ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து நீங்கள் மேற்கொள்ளும் அடுத்த ரயில் பயணத்தின் போது ஆரோக்கியமான புதிய உணவை சுவைக்க, தேசத்தின் போக்குவரத்தான இந்தியன் ரயில்வே தனது சமையல் பிரிவான Indian Railways Catering and Tourism Corporation (IRCTC) ஐஆர்சிடிசி மூலம் புதுப்பிக்கப்பட்ட நேர்த்தியான நவீன சமையல் கூடம் மற்றும் சிற்றுண்டி நிலையத்தை ஈரோடு ரயில் நிலையத்தில் துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு ரயில் நிலையம் தெற்கு ரயில்வேயின் சேலம் ரயில் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

நேர்த்தியான இந்த சமையல் கூடம் புனரமைக்கப்பட்டு நவீன சமையலறை சாதனங்களான walk-in cold room, combi oven, walk-in coolers ஆகியவற்றுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக, சேலம் கோட்ட ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர். ஐஆர்சிடிசி யின் இந்த வசதியோடு ஈரோடு ரயில் நிலையம் தற்போது சைவம் மற்றும் அசைவ உணவகங்களையும் அவற்றுக்கான தனித்தனி சமையலறைகளையும் கொண்டுள்ளது. இந்த உணவங்களில் இரண்டு தனித்தனி சாப்பாட்டு அறைகள் மற்றும் இரண்டு பார்சல் கவுண்டர்களும் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : பரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்?

ஏற்கனவே ஈரோடு ரயில் நிலையத்தில் சமையலறை வசதி இருந்தது. ஆனால் புனரமைக்கப்பட்ட பிறகு மேம்படுத்தப்பட்ட வசதிகளான அரைக்கும் இடம், pot wash, cold rooms, combi oven ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகள் சமையலையும், சமைத்த உணவுகளை சேமித்து வைக்கும் வசதிகளையும் மேம்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் 1500 நபர்களுக்கு உணவு சமைக்கும் வசதிகள் இந்த மேம்படுத்தப்பட்ட சமையலறைகளில் உள்ளது, என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு ரயில் நிலையம் தெற்கு ரயில்வேயில் உள்ள ஒரு முக்கியமான ரயில்வே சந்திப்பு. ஈரோடு மாநகர மக்களுக்கு பெரிதும் பயன்படும் இந்த ரயில் நிலையம் ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. மேலும் வேலை நாட்களில் அதிகப்படியான ரயில் பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துவார்கள்.

மேலும் படிக்க : பெங்களூரில் இருந்து மைசூரை அடைய 45 நிமிடங்கள் மட்டுமே! புதிய திட்டத்தின் பலன்கள் இதோ!

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close