scorecardresearch

பெங்களூரில் இருந்து மைசூரை அடைய 45 நிமிடங்கள் மட்டுமே! புதிய திட்டத்தின் பலன்கள் இதோ!

தற்போது சதாப்தி எக்ஸ்பிரஸ் இரண்டு நகரங்களையும் இணைக்க 2 மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறது.

Mysuru-Chennai high speed rail corridor gets off the blocks
Mysuru-Chennai high speed rail corridor gets off the blocks

Mysuru-Chennai high speed rail corridor gets off the blocksசென்னை மற்றும் மைசூரினை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் 275 சாலை சமீபத்தில் விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது இந்த இரு நகரங்களுக்கும் இடையே செல்லும் ரயில் பாதைகளையும் விரிவுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை – மைசூர் ரயில் பாதையை விரிவுப்படுத்தப்படும் பணி 2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில அரசின் ஜாய்ண்ட் வென்ச்சரான நேசனல் ஹை-ஸ்பீடு ரெயில் கார்ப்பரேசன் லிமிட்டட் (National High-Speed Rail Corporation Limited (NHSRCL)) ஏரியல் சர்வே எடுப்பதற்காக டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டால் பெங்களூருவில் இருந்து மைசூர் வருவதற்கான நேரம் 45 நிமிடங்களாக குறையும். தற்போது சதாப்தி எக்ஸ்பிரஸ் இரண்டு நகரங்களையும் இணைக்க 2 மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறது.

அதிகரித்து வரும் பயணிகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க இந்த திட்டத்தை முதலில் அறிமுகம் செய்தனர். இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் 300 கி.மீ வேகம் வரை ரயில் தன்னுடைய வேகத்தை எட்ட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்டி கனெக்ட்டிவிட்டி, ஏற்கனவே இருக்கும் கட்டுமானங்கள், நிலத்தினை கைப்பற்றுதல், சுகாதாரம் குறித்து பல்வேறு முக்கிய டேட்டாக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது NHSRCL.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mysuru chennai high speed rail corridor gets off the blocks