IRCTC : சுற்றுலா பயணிகளுக்காக பல சலுகைகளையும், சுற்றுலா ஆஃபர்களையும் அளித்து வரும் ஐ.ஆர்.சி.டி.சி, ஊட்டி பொம்மை ரயிலுக்கு அசத்தல் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.
ஊட்டியில் உள்ள டீ அருங்காட்சியகம், ஊட்டி ஏறி, பூங்கா மற்றும் பைக்காரா அறுவி போன்ற பெரும்பாலான சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்க்க ஐ.ஆர்.சி.டி.சி இந்த புதிய சுற்றுலா பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாகவே ஊட்டி என்றால் அனைவரின் மனதிற்குள்ளும் வந்து செல்லும் ஒரே எண்ணம் பொம்மை ரயிலில் பயணிக்க வேண்டும் என்ற ஒரே ஆசை தான். உங்களின் அந்த ஆசையை நிறைவேற்றவே இந்தியன் ரயில்வே இந்த முயற்சியை எடுத்துள்ளது.
நீலகிரி மலை ரயில்வே பிரபலமான சுற்றுலா தளமாகும். குளு குளுவென இருக்கும் ஊட்டியை இந்த பொம்மை ரயிலில் சுற்றி வருவதே ஒரு தனி அனுபவம் தான். மேட்டுப்பாளையம் முதம் ஊட்டி வரை சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவை கொண்டது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது, பயணிகளை இயற்கை கட்டி தழுவுவது போன்ற உணர்வு ஏற்படும். 250 பாளங்கள், 16 சுறங்கங்களை கடந்து செல்கிறது இந்த ரயில்.
IRCTC Toy Train Package : ஊட்டி ரயில் டூர் பேக்கேஜ் என்னென்ன சலுகை உள்ளது
- சென்னை - மேட்டுப்பாளையம் 3ம் ஏசி பெட்டியில் பயணம்.
- மேட்டுப்பாளையம் - ஊட்டி : 2ம் கிளாஸ் பொம்மை ரயில் பயணம்.
- 2 நாட்கள் ஊட்டியில் தங்கும் வசதி
- சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்ப்பது
- சுற்றுலா காப்பீடு
- குழுவாக செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தல்
IRCTC : எப்படி டிக்கெட் புக் செய்வது?
ஐ.ஆர்.சி.டி.சி தளத்திலேயே டிக்கேட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ரயில் புறப்படும் நாளுக்கு 4 நாட்கள் முன்னதாக மட்டுமே டிக்கெட் பெற முடியும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த பயணம் தொடங்கும். குறிப்பாக உங்களுக்கு எந்த பெர்த் வேண்டுமென்று கூட நீங்களே முடிவு செய்துக் கொள்ளலாம்.
ஊட்டி ரயில் பேக்கேஜ் டிக்கெட் விலை:
இரண்டு பேர் ஷேரிங் : 10,500 ரூபாய்
மூன்று பேர் ஷேரிங் : 8,940 ரூபாய்
5 - 11 வயது வரையிலான குழந்தைகள் : 6,650 ரூபாய் (கட்டில் வசதியுடன்)
5 - 11 வயது வரையிலான குழந்தைகள் : 6,650 ரூபாய் ( கட்டில் வசதி இல்லாமல்)
குழுவாக செல்ல (4-6 பயணிகள்) :
இரட்டை புக்கிங் : 9,200 ரூபாய்
மூன்று புக்கிங் : 8,750 ரூபாய்
5 - 11 வயது வரையிலான குழந்தைகள் : 7,850 ரூபாய் (கட்டில் வசதியுடன்)
5 - 11 வயது வரையிலான குழந்தைகள் : 7,850 ரூபாய் ( கட்டில் வசதி இல்லாமல்)