Advertisment

ரயில் புறப்படுவதற்கு 20 நிமிடங்கள் முன்பே ஸ்டேஷனில் இருக்கணுமாம்!! வருகிறது புதிய கட்டுப்பாடு

ரயில் நிலையங்களில் ரயில் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் உள்ளே சென்றுவிட வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC Railways now plan to seal stations 20 minutes ahead of departure - ரயில் புறப்படுவதற்கு 20 நிமிடங்கள் முன்பே ஸ்டேஷனில் இருக்கணுமாம்!! வருகிறது புதிய கட்டுப்பாடு

IRCTC Railways now plan to seal stations 20 minutes ahead of departure - ரயில் புறப்படுவதற்கு 20 நிமிடங்கள் முன்பே ஸ்டேஷனில் இருக்கணுமாம்!! வருகிறது புதிய கட்டுப்பாடு

விமான நிலையத்தில் இருப்பது போல், ரயில் நிலையங்களிலும் ரயில்கள் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் வந்துவிட வேண்டும் என்ற புதிய திட்டத்தை நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 202 ரயில் நிலையங்களில் அமல்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

Advertisment

ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஓடும் ரயில்களில் ரோந்து பணிகள் அதிகரித்தல், சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, ஒருங்கிணைந்த பாதுகாப்பு வசதியை மேம்படுத்தவுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே படையின் இயக்குநர் ஜெனரல் அருண்குமார் கூறுகையில், "ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு மேம்படுத்தி வருகிறோம். அதன்படி முக்கியமான ரயில் நிலையங்களில் ரயில் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் உள்ளே சென்றுவிட வேண்டும்.

அதன்பின் வரும் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் இந்தப் புதிய பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையம் உட்பட மொத்தம் 202 முக்கிய ரயில் நிலையங்களில் இந்தப் பாதுகாப்பு முறையை நடைமுறைப்படுத்த ரயில்வே திட்டமிட்டு வருகிறது. இதற்காக அந்தந்த ரயில் நிலையங்களில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும். நுழைவாயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயணிகளைச் சோதனையிட்ட பின்னரே ரயில் நிலையங்களுக்குள் செல்ல அனுமதிப்பர். இந்தத் திட்டம் ரூ.385 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது" என்று அவர் கூறினார்.

Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment